பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. I & 4 பெரிய புராண விளக்கம்-1).

நியாய முறையோடு உருபு மயக்கம். பணிந்து-அந்த நற்றுணையப்பரை வணங்கி. போற்றி-வாழ்த்தி. நீடியபிறகு நெடுங்காலமாக இருக்கத் தக்கதாகிய, அருள்-அந்த நற்றுணையப்பர் வழங்கிய திருவருளை. முன்-முன்னால். பெற்று-தாம் பெற்றுக் கொண்டு. ப்: சந்தி. போதுவார் தம்மை-எழுந்தருளுபவரை. தம்: அசைநிலை. ச்: சந்தி. சூழ்ந்து-சுற்றிக் கொண்டு. பூசுரர்-பூமியில் தேவர்களாக விளங்கும் அந்தணர்களுடைய சுரர் : ஒருமை பன்மை மயக் கம். குழாங்கள்-கூட்டங்கள். போற்றும்-தம்மை வாழ்த்தும். காதல்-விருப்பத்தை. கண்டு-நோக்கி. கவுணியர்-சீகாழியில் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த அந்தணர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். தலைவனார்தாம்-தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம்: அசைநிலை. அங்கு-அந்தத் திருநனிபள்ளியில். அமர்ந்தார்-த ங் கி க கொண்டிருந்தார்.

பிறகு வரும் 117-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக் கும் கட்டுமலையின் மேல் விளங்கும் தோணியில் அமர்ந்திருக் கும் அம்பிகையாகிய பெரிய நாயகி தமமுடைய கொங்கை களிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கியருளிய சிவஞானப்பாலை எல்லா உலகங்களில் வாழ்பவர்களும் உஜ்ஜீவனத்தை அ.ை யும் வண்ணம் குடித்தருளிய அடியேங்களுடைய பெருமை யையும் தகுதியையும் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை அவருடைய எதிரில் சென்று வரவேற்று: வருவதற்கு விரும்பி தேவர்களும் பணியும் உண்மையான உயர்ச்சியைப் பெற்ற தவத்தைப் புரிந்த திருத்தொண்டர் களோடு தங்களுடைய பெருமையைப் பெற்ற விருப்பத் தோடு தலைச்சங்காட்டில் வாழும் வேதியர்கள் எல்லா ரும் வந்து சேர்ந்தார்கள். பாடல் வருமாறு:

" அம்பிகை அளித்த ஞானம்

அகிலமும் உய்ய உண்ட