பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரிய புராண விளக்கம்-10

ஆழிமணிச் சிறுதேரூந்த் தவ்விரதப் பொடியாடும் வாழிவளர் மறைச்சிறார் நெருங்கியுள மணிமறுகு."

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. மணி மறுகு-அந்தச் சீகாழியில் விளங்கும் அழகிய வீதிகளில்; ஒருமை பன்மை மயக்கம். வேள்வி-யாகத்தை. புரி-அந்தணர்கள் செய்யும். சடங்கு அதனை-சடங்காகிய அந்த யாகத்தை விளையாட்டு-சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடல்களைச் செய்யும்; ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பண்ணை தொறும்-ஒவ்வோர் இடத்திலும். பூழிஉற-பு ழு தி அடையுமாறு. வகுத்து-வகைப்படுத்தி. அமைத்து-அமைத்து. ப்: சந்தி. பொன்-தங்கத்தாற் செய்யப் பெற்ற புனை-அந்தச் சிறுவர்களும் சிறுமிகளும் தங்களுடைய இடுப்புக்களில் அணிந்திருக்கும். கிண் கினி-கிண் கிணி களாகிய சலங்கைகள்: ஒருமை பன்மை மயக்கம். ஒலிப்பஒலியை எழுப்ப. ஆழி-மூன்று சக்கரங்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். மணி-அழகிய; அடிக்கும் மணி யைக் கட்டிய' எனலும் ஆம். ச்: சந்தி. சிறு தேர்-சிறிய தேராகிய நடை வண்டியில். ஊர்ந்து- அமர்ந்து அதைச் செலுத்தி. அவ்விரதப் பொடி-அந்தச் சிறு தேரால் எழும்பிய புழுதியில். ஆடும்-குளிக்கும். வாழி: அசைநிலை. வளர்வளரும். மறைச்சிறார். அந்தணச் சிறுவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மறை: திணை மயக்கம். நெருங்கி உள. நெருக்கமாக இருப்பவையாக விளங்கும்.உள:இடைக்குறை.

அடுத்து வரும் 12-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தச் சீகாழியின் பக்கங்கள் எல்லாவற்றிலும் ஒளியை விட்டு விளங்கும் நீளமான அழகிய வீதியில் உயரமாக நிற்கும் வெண்மையாகிய சுண்ணாம்பைப் பூசியிருக்கும் திருமாளிகைகளின் மேல் மேகங்கள் வந்த தொட்டுத் தவழும் உச்சியிலுள்ள ஒவ்வொரு நாசிகையிலும் கட்டிய துவசம் .சுற்றியிருக்கும் இரவு நேரத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் என்று கூறப்படும் அன்றலர்ந்த மலர்கள் மலர அடைந்த