பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 187 ·

கைகளில் எடுத்துக் கொண்டு. ஆவணiதி-கடைத்தெரு. எல்லாம்-முழுவதும். அலங்கரித்து-பூக்களாலும் தோரணங் களாலும் அலங்காரத்தைச் செய்து அண்ணலாரை-தலை வராகிய திருஞான சம்பந்த முர்த்தி நாயனாரை. அண்ண லார்-பெருமையைப் பெற்றவர்’ எனலும் ஆம். மா-மா மரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். மா-வண்டுகள்' எனலும் ஆம்: ஒருமை பன்மை மயக்கம். அணை-அடைந்து வளர்ந்து நிற்கும். மலர்மென்சோலை-பல வகையான மலர்கள் மலர்ந்திருக்கும் மரங்கள் நிறைந்திருக்கும் மென்மையான பூம்பொழிலையும். வ ள ம் - நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், ஆலய வளம், விருந்தினரை ஒம்பும் வளம் முதலிய வளங்களைப் பெற்ற . ஒருமை பன்மை மயக்கம். பதி-தங்களுடைய நகரமாகிய தலைச்சங்காட்டுக்கு. கொண்டு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை அழைத்துக் கொண்டு.புக்கார்-அந்த ஊருக்குள் நுழைந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 119-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'தலைச்சங்காட்டில் வாழும் அழகிய வேதியர்கள் சுற்றி: விருந்து தங்களுடைய திருவுள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கி எழ பெருமையைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களினு: டைய இனிய கானம் நிறைந்திருக்க பெருமையையும் அழனகயும் பெற்ற நற்றுனையப்பருடைய திருக்கோயிலை அடைந்து பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக, உள்ள வேதங்களினுடைய அர்த்தமாக விளங்குபவராகிய அந்த நற்றுணையப்பரை வணங்கி அழகைப் பெற்ற நல்லவர் கூடிய சங்கத்தில் வழங்கும் முறை வழியில் அந்தத் திருக். கோயிலை அடைந்த பான்மையை அந்தத் திருஞான் சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிக் செய்தார். பாடல் வருமாறு:

" திருமறை யோர்கள் சூழ்ந்து

சிந்தையில் மகிழ்ச்சி பொங்கப்