பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 15.

பகல் நேரத்தில் பல நிறங்களோடு உயரமாக உள்ள ஆகாயம் தளிர்த்து விளங்குவது என்று கூறுமாறு நெருக்க மாக இருப்பவையாகத் திகழும். பாடல் வருமாறு:

விடுசுடர்கிள் மணிமறுகின் வெண்சுதைமா ளிகை மேகம் தொடுகுடுமி காசிதொறும் தொடுத்தகொடி

- சூழ்கங்குல் உடுஎனும்நாள் மலர்அலர உறுபகலிற் பல

நிறத்தால் கெடுவிசும்பு தளிர்ப்பதென நெருங்கியுள

மருங்கெல்லாம்.'

இந்தப் பாடலிலும் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. மருங்கு-அந்தச் சீகாழியினுடைய பக்கங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றிலும். விடுசுடர்-ஒளியை விட்டு விளங்கும். நீள்-நீளமான. மணிஅழகிய, மறுகின்-வீதியில். வெண்-வெண்மையாகிய, சுதைசுண்ணாம்பைப் பூசியிருக்கும்; வெள்ளையடித்திருக்கும். மாளிகை-உயரமாக நிற்கும் திருமாளிகைகளின் மேல்: ஒருமை பன்மை மயக்கம், மேகம்-முகில்கள்: ஒருமை பன்மை மயக்கம். தொடு-வந்து தொட்டுத் தவழும். குடுமி-உச்சியில் உள்ள நாசிதிொறும்ஆவ்வொரு நாசிகையிலும். நாசிகைமூக்கைப் போன்ற மதில் உறுப்பு. தொடுத்த-கட்டியுள்ள. கொடி-துவசம். சூழ்-சுற்றியிருக்கும். கங்குல்-இரவு நேரத் தில் தோன்றும், உடு-நட்சத்திரங்கள்; ஒருமை பன்மை மயக் கம். எனும்-என்று கூறப்படும்; இடைக்குறை. நாள்-அன்று அலர்ந்த மலர்-மலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அலரமலர. உறு-அடைந்த பகலில்-பகல் நேரத்தில். பல நிறத் தால்-பல வர்ணங்களோடு; உருபு மயக்கம். நிறம்: ஒருமை பன்மை மயக்கம். நெடு-உயரமாக உள்ள. விசும்பு-ஆசாயம். தளிர்ப்பது என-தளிர்த்து விளங்குவது என்று கூறுமாறு. என: இடைக்குறை. நெருங்கி உள-நெருக்கமாக இருப்பவை

யாகத் திகழும். உள. இடைக்குறை.