பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 20 I

விளங்கும் அடியேர்கள் தம்மைச் சுற்றி வரப் பரமேசுவர டிராகிய வேதாரணியேசுவரருடைய திருக்கோயிலைச் சுற்றி -வலமாக வந்து என்றும் அழியாமல் இருப்பவராகிய அந்த ஈசுவரருடைய சந்நிதியை அடைந்து தரையிற் படியுமாறு விழுந்து அந்த ஈசுவரரை வணங்கித் தரையின் மேல் விழுந் தார்." பாடல் வருமாறு:

  • முத்தமிழ் விரகர் தாமும்

முதல்வர்கோ புரத்து முன்னர்ச் சித்தம்நீ டுவகை யோடும்

சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப் பத்தராம் அடியார் சூழப்

பரமர் கோ யிலைச்சூழ் வந்து கித்தனார் தம் முன் பெய்தி

கிலமுறத் தொழுது வீழ்ந்தார்.' முத்தமிழ்-இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பகுதிகளைப் பெற்ற செந்தமிழ் மொழியில். விரகர் தாமும். வல்ல வித் தகராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். தாம்: அசைநிலை. முதலவர்-எல்லாத் தேவர்களுக்கும் மேலான முதல் தேவராகிய வேதாரணியேசுவரருடைய. கோபுரத்து-திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுரத்திற்கு முன்னர்-முன்னால். ச்:சந்தி. சித்தம்-தம் முடைய திருவுள்ளத்தில். நீடு-உண்டாகிய, உவகையோடும்ஆனந்தத்தோடும். சென்று-எழுந் தருளி. தாழ்ந்து தரையில் விழுந்து வேதாரணியேசுவரரை வணங்கி விட்டு. எழுந்துபிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. புக்கு-திருக் கோயிலுக்கு உள்ளே நுழைந்து. ப்:சந்தி. பத்தராம்-வேதா ரணியேசுவரருடைய பக்தர்களாக விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். அடியார்-அடியவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சூழ-தம்மைச் சுற்றி வர. ப்:சந்தி. பரமர்-பரமேசு வரராகிய வேதாரணியேசுவரருடைய. கோயிலை-திருக் கோயிலை. ச் : சந்தி. சூழ் வந்து-சுற்றி வலமாக வந்து. நித்தனார் தம்முன்பு-என்றும் அழியாமல் இருப்பவராகிய