பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 2覆蓋

தலங்கள் எல்லாவற்றிலும் இன்பம் உண்டாகுமாறு அந்தச் சிவத் தலங்களில் எழுந்தருளியிருக்கம் சிவபெருமான்களை

இநத ரு (i) Qサ م

வணங்கித் துதித்துத் தையலாளாகிய உமாதேவியைத் தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்தவராகிய சிவபெருமானாரை அந்த நாயனார் செந்தமிழ் மொழியில் அமைந்த சொற்கள் அடங்கிய மாலையாகிய ஒரு திரு.பதி கத்தைப் பாடியருளினார். பாடல் வருமாறு:

வைகும்.அக் காளிற் கீழ்பால்

மயேந்திரப் பள்ளி வாசம்

செய்பொழிற் குருக ஆரும்

திருமுல்லை வாயில் உள்ளிட்

டெய்திய பதிகள் எல்லாம்

இன்புற இறைஞ்சி ஏத்தித்

தையலாள் பாகர் தம்மைப்

பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

வைகும்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அவ்வாறு சீகாழியில் தங்கிக் கொண்டிருக்கும். அந்நாளில்அந்தக் காலத்தில். கீழ்பால்-சீகாழிக்குத் கிழக்குத் திசைப் பக்கத்தில் உள்ள. மயேந்திரப்பள்ளி-மயேந்திரப்பள்ளியும். வாசம்-நறுமணம். செய்-கமழும். பொழில்-மலர்கள் மலர்ந் திருக்கும் பலவகையான மரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ் சோலையைப் பெற்ற. குருகாவூரும்-திருக்குருகாவூரும். திருமுல்லைவாயில்-தென் திருமுல்லைவாயில். உ. ள் வளி ட் டுஅடங்கியிருக்க. எய்திய-தாம் எழுந்தருளிய. பதிகள்-சிவத் தலங்கள். எல்லாம்-எல்லாவற்றிலும். இன்புற-இன்பம் உண்டாகுமாறு. இறைஞ்சி-அந்தச் சிவத்தலங்களில் எழுந் தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கி. ஏத்திதுதித்து. த்:சந்தி. தையலாள்-இளமையைப் பெற்றவளாகிய உமாதேவியை, பாகர் தம்மை-தம்முடைய வாம பாகத்தில் எழுந்தருளச் செய்தவராகிய சிவபெருமானாரை. தம்:அசை நிலைப்:சந்தி.தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த.சொல்.