பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 3 பெரிய புராண விளக்கம்-10

சொற்கள் அடங்கிய ஒருமை பன்மை மயக்கம். மாலைமாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. பாடினார்- அந்த தாயனார் பாடியருளினார்.

திருமயேந்திரப்பள்ளி: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் திருமேனி அழகர். அம்பிகை வடிவாம்பிகை. இது ஆச்சாபுரத்தி லிருந்து வடகிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. சந்திரன், சூரியன், பிரமதேவன், இந்திரன் ஆகிய வர்கள் வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

" திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்

கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் வரைவிலா எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் அரவரை அழகனை அடியிணை பணிமினே."

திருக்குருகாவூர்: இது சோழ நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வெள்ளிடை ஈசுவரர். அம்பிகை காவியங்கண்ணி அம்மை. இந்தச் சிவத் தலம் இந்தக் காலத்தில் திருக்கடாவூர் என வழங்குகிறது. இது சீகாழிக்குக் கிழக்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. சீகாழியிலிருந்து இந்தத் தலத்திற்கு எழுந்தருளிய சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் அவருடன் வந்த பரிவார மக்களுக்கும் வெள்ளிடை ஈசுவரர் கட்டுச் சோறும் தண்ணி ரும் வழங்கியருளிய தலம் இது. இந்தச் சிவத்தலம் திருக் குருகாவூர் வெள்ளடை எனவும் வழங்கும். இதைப் பற்றி அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: -

சுண்ணவெண் ணிறனி மார்பில் தோல்புனைநீ

தெண்ணரும் பலகணம் ஏத்தநின் றாடுவர் விண்ணமா பைம்பொழில் வெள்ளடை மேவிய பெண்ணமர் மேனிஎம் பிஞ்ஞக னாரே.'