பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரிய புராண விளக்கம்-10

இந்தப் பாடல் குளகம். மெய்வகை-உண்மையான முறையில், ஞானம் சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் வீற்றிருக்கும் பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து, ஒரு பொற் கிண்ணத்தில் வைத்து வழங்கிய சிவஞானப் பாலை. பிரமபுரி-சீகாழி. பெற்ற-குடித்தருளப் பெற்ற. வேதியர்-மறையவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார். அவ்வகை-அந்த முறையில். மருங்கு-திருக்குருகாவூர் வெள்ளடைக்குப் பக்கத்தில், சூழ்ந்த-சுற்றியுள்ள. பதிகளில்சிவத்தலங்களுக்கு எழுந்தருளி, உருபு மயக்கம். அரனார்அந்தத் தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் ஹரனார்களாகிய சிவபெருமான்களுடைய. பொன்-தங்கத்தைப் போன்ற; உவம ஆகுபெயர். தாள்திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். விரவி-அந்தச் சிவத்தலங்களில் வாழும் பக்தர்களோடு தாமும் சேர்ந்து கொண்டு. ப்:சந்தி, போற்றி-அந்தச் சிவபெருமான்களை வாழ்த்தி வணங்கி விட்டு. மண்-இந்த மண்ணுலகத்தில், உளோருக்கு-வாழும் மக்களுக்கு ஒருமை பன்மை மயக்கம்; இ ைட க் கு ைற. உய்வகை-உஜ்ஜீவனத்தை அடையும் விதத்தை. உதவிய-உதவும் பான்மையைப் பெற்ற. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. பாடி-அந்த நாயனார் பாடி யருளி. வ்ைவகையோரும்-எந்த வகையான சாதிகளில் பிறந்த மக்களும்; ஒருமை பன்மை மயக்கம். ஏத்த-துதிக்கு மாறு. இறைவரை-எங்கும் நிறைந்தவர்களாகிய அந்தச் சிவபெருமான்களை ஒருமை பன்மை மயக்கம். ஏத்தும்தாம் துதிக்கும். நாளில்-காலத்தில்.

பின்பு உள்ள 131-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனார் தெளிவாக உள்ள அமிர்தத்தைப் போலத் தம்மிடம் எழுந்து வரும் பான்மையைப் பெற்ற இசைப் பாடல்களைப் பாடும் அந்தத் பெரும்பாணருடைய தர்மபத்தினியாராகிய மதங்க சூளாமணியார் என்ற திருநாமத்தைக் கொண்ட மாதரசி