பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரி புராணம் 215

யார் ஒருமைப்பாட்டைக் கொண்ட திருவுள்ளப்பான்மை யோடு ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த

மூர்த்தி நாயனாருடைய வெற்றிக்கழலைப் பூண்டு கொண்டு

விளங்கும் திருவடிகளைப் பணிவதற்காக இனிமையாகிய இசைப் பாடல்களை வழங்கும் பான்மையைப் பெற்ற தம்முடைய யாழினை எடுத்துக் கொண்டு சண்பையாகிய சீகாழிக்கு வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு:

திருலே கண்டத்துப் பெரும்பாணர் தெள்ளமுதின் வருகீர்மை இசைப்பாட்டு மதங்கசூ ளாமணியார் ஒருரீர்மை யுடன்உடைய பிள்ளையார் கழல் வணங்கத் தருகீர்மை ய ழ் .ெ க | ண் டு சண்பையிலே வந்தணைந்தார்.'

திருநீல கண்டத்துப் பெரும்பாணர்-திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார். தெள்-தெளிவாக உள்ள. அமுதின்-அமிர்தத்தைப் போல. வரு-தம்மிடம் எழுந்து வரும். நீர்மை:பான்மைமைப் பெற்ற. இசைப்பாட்டுசங்கீதத்துக்குரிய பாடல்களைப் பாடும்; ஒருமை பன்மை மயக்கம். மதங்கசூளாமணியார்-அந்தப் பெரும்பாணருடைய தர்மபத்தினியாராகிய மதங்கசூளாமணியார் என்ற திரு நாமத்தைக் கொண்ட மாதரசியார். ஒருநீர்மையுடன்ஒருமைப்பாட்டைக் கொண்ட திருவுள்ளப் பான்மையோடு. உடையபிள்ளையார்-ஆளுடைய பிள்ளையாராகிய திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை; ஆகு பெயர். வணங்க-பணிவதற்காக. த்:சந்தி. தரு-இனிமை யாகிய இசைப் பாடல்களை வழங்கும். நீர்மை- பான்மை யைப் பெற்ற, யாழ்-தம்முடைய பெரிய யாழினை. கொண்டு.எடுத்துக் கொண்டு. சன்பையில்-சண்பையாகிய சீகாழிக்கு உருபு மயக்கம்.ஏ:அசைநிலை,வந்து அணைந்தார் -வந்து சேர்ந்தார். '

அடுத்து வரும் 132-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: