பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ο பெரிய புராண விளக்கம்-16

'அவ்வாறு அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும் பாண நாயனார் சீகாழிக்கு வந்த வருகையைத் தெரிந்து கொண்டு தம்மை ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தப் பெரும்பாணருக்கு எதிரில் சென்று வரவேற்க அந்தப் பெரும்பாணர் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய வண்டுகள் படிந்து மொய்க்கும் இரண்டு செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தாம் விழையும் பேராவலோடு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் துதித்து உண்மை, யான வார்த்தைகளால் தோத்திரங்களைப் புரிந்து தம்மிடம் வரும் தன்மையை வழங்கும் நல்ல வாழ்வு வந்து தம்மை அடைய மகிழ்ச்சியில தலை சிறந்து நின்றார். பாடல் வருமாறு:

பெரும்பாணர் வரவறிந்து பிள்ளையார் எதிர்கொள்ளச்

சுரும்பார்செங் கமலமலர்த் துணைப்பாதம் தொழு

தெழுந்து

விரும்பார்வத் தொடும் ஏத்தி மெய்ம்மொழிக

- ளால் துதித்து வரும்பான்மை தருவாழ்வு வந்தெய்த மகிழ்சிறந்தார்.' பேரும் பானர்-அவ்வாறு அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார். வரவு-சீகாழிக்கு வந்த வருகையை, அறிந்து-தெரிந்து கொண்டு. பிள்ளையார்ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எதிர் கொள்ள-அந்தப் பெரும்பாணருக்கு எதிரில் சென்று வரவேற்க. ச்: சந்தி. சுரும்பு-அந்தப் பெரும்பாணர் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்-படிந்து மொய்க்கும். செங்கமல மலர்-செந்தாமரை மலர்கள்ைப் போன்ற: ஒருமை பன்மை மயக்கம்: உவம ஆகுபெயர். த், சந்தி, துணை-இரண்டு. ப்: சந்தி. பாதம்-திருவடிகளை ஒருமை. பன்மை மயக்கம். தொழுது-தரையில் விழுந்து வணங்கி,