பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 213

இசைப் பாடல்களை விரிவாக அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனார் பாடுபவரானார். பாடல் வருமாறு: -

  • கோயிலினிற் புறமுன்றிற் கொடுபுக்குக் கும்பிடுவித்

தேயும் இசை யாழ்உங்கள் இறைவருக்கிங் கியற்றும்

6了5雷 ஆயபுகழ்ப் பிள்ளையார் அருள்பெற்ற அதற்கிறைஞ்சி .ே ம ய .ெ த ைட த் தந்திரியாழ் விக்கி இசை

விரிக்கின்றார்.'

கோயிலினில்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிரமபுரீசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலி னுடைய உருபு மயக்கம். புற-வெளியிடத்தில் உள்ள. மூன்றில்-முற்றத்திற்கு. முன்றில்-இல்முன்; பின் முன்னாகத் தொக்க தொகை. கொடு-அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பான நாயனாரை அழைத்துக் கொண்டு. புக்குதிருக்கோயிலுக்கு உள்ளே நுழைந்து, க்சந்தி, கும்பிடுவித்துஅந்தப் பெரும்பாணரைப் பிரமபுரீசரைக் கும்பிடுமாறு செய்தருளி, ஏ.யும்-உங்களிடம் மேவியிருக்கும். இசை-இசைப் பாடல்களைப் பாடுவதற்கு உரிய, ஒருமை பன்மை மயக்கம். யாழ்-யாழை. உங்கள்-உங்களுடைய. இறைவருக்கு-தலை வராகிய பிரமபுரீசருக்கு பிரமபுரி-சீகாழி. இங்கு-இந்தத் திருச்கோயிலில். இயற்றும்-மீட்டி வாசிப்பீராக. என-என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய இடைக்குறை. ஆய-தம்மிடம் அமைந்த. புகழ். பெரும் புகழைப் பெற்ற, ப்:சந்தி. பிள்ளையார்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அருள்-'நீர் உம்முடைய யாழை இந்தத் திருக்கோயிலில் வாசிப்பீராக’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்த திருவருளை. பெற்ற-அடைந்த அதற்கு-அந்தப் பாக்கியத் திற்காக. இறைஞ்சி-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி, நாயனாரை அந்தப் பெரும்பாணர் வணங்கி. மேய.மே.விய. தொடை-கட்டுதலைப் பெற்ற, த்:சந்தி.தந்திரி-நரம்புகளைக்