பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 24 பெரிய புராண விளக்கம்-10

பாடல்களைப் பாடியபிறகு நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய தோணியப்பர் வழங்கிய திருவருளால் சீகாழி பில் வாழும் அந்தணர்களினுடைய அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தப் பெரும்பாணரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு எழுந்தருளி அந்தப் பெரும் பாணர் சென்று தங்கும் இடத்தை அமைத்து நல்ல ஆறு சுவைகளைப் பெற்ற விருந்து உணவையும் சிறப்பாக இருந்து அந்தப் பெரும்பாணருக்கு வழங்கியருள. பாடல் வருமாறு:

'எண்ணரும் சீர்த் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவிப் பண்ணமையாழ் இசைகூடப் பெரும்பாணர் பாடியபின் கண்ணுதலார் அருளினாற் காழியர்கோன் கொடுபோந்து நண்ணிஉறை யிடம் சமைத்து கல்விருந்து சிறந்தளிப்பு.'

இந்தப் பாடல் குளகம். எண்-எண் ணுவதற்கு முதல் நிலைத் தொழிற்பெயர். அரும்-அருமையாக விளங்கும். சீர்.சீர்த்தியைப் பெற்றவரும் வினையாலணையும் பெயர். த்:சந்தி. திருத்தோணி-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் அழகிய தோணியில். எம்பெருமான்-வீற்றிருக்கும் அடியேங் களுடைய தலைவனாகிய தோணியப்பனுடைய. ‘அடியேங் கள் என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர் களையும் சேர்த்துக் கூறியது. கழல்-வெற்றிக்கழலைப்பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளை ஆகுபெயர். பரவிபுகழ்ந்து. ப்:சந்தி. பண்-பண்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நட்டபாடை, தக்கராகம், பழந்தக்க ராகம், இந்தளம், சீகாமரம், க ந் தா ர ம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, காந்தாரப் பஞ்சமம், கொல்லி, கொல்லிக்கெளவாணம், கெளசிகம் , பஞ்சமம், சாதாரி, புற நீ ர் ைம, அந்தாளிக் குறிஞ்சி, செந்துருக்கி, சாரைபாணி முதலியவை. அமைஅமைந்த. யாழ்-தம்முடைய யாழில். இசை-சங்கீதம். கூடசேர்ந்து அமைய, ப்:சந்தி. பெரும்பாணர்-திருநீலகண்டத்து