பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 227

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிச் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

  • சங்கமரு முன் கைமட மாதையொரு பாலுடன் விரும்பி அங்கமுடன் மேலுற அணிந்துபிணி தீர அருள் செய்யும் எங்கள் பெரு மானிட மெனத்தகு முனைக்கடலின்

முத்தம் துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே." பிறகு வரும் 139-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

சீகாழியில் வாழும் வேதியர்கள் முன்பிறவியல் செய்த தவத்தினுடைய பிரயோசனமாக விளங்கும் வேதியர் களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவராகிய சிவபாத இருதயருடைய புதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருமால் பள்ளி கொண்டருளியிருக்கும் பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை விழுங்கிய வராகிய பிரமபுரீசருடைய திருவடிகளை வாழ்த்தித் தாம் பாடியருளும் திருப்பதிகத்தில் அமைந்திருக்கும் சங்கீதத்துக்கு உரிய பண்ணினைத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனார் தம்முடைய யாழில் முறைப்படி வைத்து ச, ரி,க, ம,ட,த, நிச என்னும் ஏழு சுவரங்களும் அடங்கிய சங் கீதத்தைத் தம்முடைய ஏவலாளாகப் பெற்ற திருநீலகண் டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார் எல்லா வகையான உயிர்களையும் மகிழ்ச்சியை அடையுமாறு புரிந்தார்.” வாடல் வருமாறு: -

காழியார் தவப்பயனாம் கவுணியர்தம் தோன்றலார்

ஆழிவிடம் உண்டவர்தம் அடிபோற்றும் பதிகஇசை வாழில்முறை மையில் இட்டே எவ்வுயிரும் மகிழ்வித்தார் ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர்."

காழியார்-சீகாழியில் வாழும் வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தவ-முன்பிறவியிற் செய்த தவத் தினுடைய. பயனாம்-பிரயோசனமாக விளங்கும். கவுணியர் தம்-வேதியர்களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த