பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感2岛 பெரிய புராண விளக்கம்-1.ே

வராகிய சிவபாத இருதயருடைய, தம்: அசைநிலை. தோன்றலார்-புதல்வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். ஆழி-திருமால் பள்ளி கொண்டருளியிருக்கும் பாற்கடலில் தோன்றிய விடம் ஆலகால நஞ்சினை. உண்டவர்தம்-விழுங்கியவராகிய பிரமபுரீசருடைய. தம்: ஆசைநிலை. அடி-தி ரு வ டி க ைள. போற்றும்-தாம் பாடியருளும். பதிக தி ரு ப் பதிக த் தி ல். இசைஅமைந்திருக்கும் சங்கீதத்துக்கு உரிய யாழில் தம்முடைய யாழில். முறைமையில்-முறைப்படி. இட்டு-வைத்து. ஏ: அசைநிலை. ஏழ்இசையும்-ச.ரி.க.ம.ப.த.நிச என்னும் ஏழு. சுவரங்களும் அடங்கிய சங்கீதத்தை. பனி-தம்முடைய ஏவலாளாக, திணைமயக்கம். கொண்ட-பெற்ற, நீலகண்ட யாழ்ப்பானர்-திரு நீ ல கண் டத் து யாழ்ப்பெரும்பாண நாயனார். எவ்வுயிரும்-எல்லா வகையான உயிர்களையும்: ஒருமை பன்மை மயக்கம். மகிழ்வித்தார்-மகிழ்ச்சியை அடையுமாறு புரிந்தார்.

திருப்பிரமபுரத்தைப் பற்றி நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

விண்ம கிழ்ந்தமதில் எய்தது மன்றி விளங்கு - தலையோட்டில் உண்மகிழ்ந்துபவி தேரியவந்தென துள்ளம் கவர்கள்வன் மண்ம கிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை மவிந்த

வரைமார்பிற். பெண்ம கிழ்ந்தபிர மாபுரம் மேவிய பெம்மான்

இவனன்றே.' அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றித் தக்கேசிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

  • எரியார் மழுவொன்றேந்தி யங்கை இடுதலை யேகலனா

வரியார் வளையார் ஐயம் வவ்வாய் மாநலம் வவ்வுதினே. சரியா நாவின் வேத கீதன் தாமரை. நான்முகத்தான் பெரியான் பிரமன் பேணி ஆண்ட பிரம புரத்தானே.”