பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 229

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிக் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: --

' அரனை உள்குiர்-பிரமன் ஊருளெம்

பரனை யேமனம்-பரவி உய்ம்மினே." அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றி வியாழக் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

' காடதணி கலங்கா ரரவம் பதிகாலதனில்

தோடதணி குவர்சுந்தரக் காதினிற்றுச் சிலம்பர் வேடதனி வர் விசயற் குருவம் வில்லும் கொடுப்பர் பீடதணி மணிமாடப் பிரம புரத்தாரே...' அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றி வியாழக் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஏகபாதப் பாசுரம் ஒன்று விருமாறு:

' பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான் பிரம புரத் துறை பெம்மான் எம்மான் பிரம புரத்துறை பெம்மான் எம்மான்.'" அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிச் சீகாமரப் .பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

எம்பிரான் எனக்கமுதம் ஆனானும் தன்னடைந்தார் தம்பிரான் ஆவானும் தழலேந்து கையானும் கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன் வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே." அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

' கறையணி வேலிலர் போலும் கபாலம் தரித்திவர் போலும் மறையும் நவின்றிலர் போலும் மாகணம் ஆர்த்திலர் - கோலும் பறையும் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையும் சடைக்கிலர் போலும் பிரமபுரம் அமர்ந் தாரே."