பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 23% .

வெங்குரு-வெங்குருவாகிய சீகாழியை ஆட்சி புரிந் தருளும். வேந்தர்-அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தா-கேடு. இல்-இல்லாத புகழைப் பெற்ற. யாழ்ப்பாணரொடும்-திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனாரோடும். தாதையார் தம்மோடும்-தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயரோடும். தம்: அசைநிலை. மேவிய-தம்மோடு சேர்ந்து வந்த சீர்-சீர்த்தியைப் பெற்ற, அடியார்கள்.நடராஜப் பெருமானாருடைய அடியவர்கள். புடைவர-தம்முடைய பக்கத்தில் வர. பூவின்மேல்-தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும். அயன்-பிரமதேவன். போற்றும்வ ா ழ் த் தி வணங்கும். புகலியினை-பு க லி யா, கி ய சீகாழியை. க்:சந்தி. கடந்து-தாண்டி, போய்-அப்பால் எழுந்தருளி. த்:சந்தி, தேவர்கள் தம்-எல்லாத் தேவர் களுக்கும் மேலாக விளங்கும். தம்: அசைநிலை. பெரும்பெருமையைப் பெற்றுத் திகழும். தேவர்-மகாதேவராகிய நடராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும். திரு-அழகிய த்:சந்தி. தில்லை-தில்லையாகிய சிதம்பரத்தின்.வழி-வழியாக ச்:சந்தி. செல்வார்-அந்தத் திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருள்பவரானார். பூவின்மேல அயன்போற்றும்புகலி: "ஏடுடைய மலரான் முனைநான் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமா புரம்,' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க.

பிறகு உள்ள 145-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'சீகாழியில் வாழும் அந்தணர்களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தில் பி ற ந் த வ ர் க ளு ைட ய குடும்பத்தில் திருவிளக்கைப் போலத் திருவவதாரம் செய்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சர்வப்பிரளய கால மாகிய நடுஇரவில் நின்று கொண்டு திருநடனம் புரிந்தருளு பவராகிய நடராஜப் பெருமானார் எழுந்தருளியிருக்கும் தலங்களை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்திற்கு எழுந்தருளும்போது இடையில் தாம் பார்த்த சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுத்