பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் $ 39

உள்ள. வெள்-வெண்மையான. இதழ்-மடல்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம்.க்:சந்தி.கேதகை-தாழம்பூ மலர்ந்தி ருக்கும் தாழை மரத்தில்.முகிழ்-அரும்புகள்: ஒருமை பன்மை மயக்கம். விரி-மலரும் மலர்களில், மணம்-நறுமணம். குழகற்றிப் பரவ.ப்:சந்தி. புள்-பலவகையான பறவைகள்; ஒருமை பன்மை மயக்கம். உடை-தங்கப்பெற்ற, த்: சந்தி. தடம். விசாலமாக உள்ள. பழனமும்-வயல்களும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த வயல்களாவன: சம்பா நெற்பயிர் விளையும் அயல், குறுவை நெற்பயிர் விளையும் வயல், மணக்கத்தை நேற்பயிர் வளர்ந்து நிற்கும் வயல்,கரும்புத் தோட்டம் முதலி யவை.படுகளும்-தடாகங்களும் ஒருமை பன்மை மயக்கம். புடை-பக்கத்தில். கழிந்திட-அகலுமாறு. ப்:சந்தி, போந்து. அப்பால் எழுந்தருளி. கொள்ளிடத்திருநதி-அழகிய கொள் ன்டமாகிய ஆற்றினுடைய.க்:சந்தி. கரை-கரையை, அணைந் தனர்-அந்த நாயனார் அடைந்தார்.

ஆடவருக்குத் திருவிளக்கு உவமை: “துளக்கமிலாத விளக்காய வித்தினை.', 'விண்களார் தொழும் விளக் கினை." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை.", வின் னுளார் தொழுதேத்தும் விளக்கினை.", "புந்திக்கு விளக் காய புராணனை.', 'மெய்கிளரும் ஞான விளக்குக் கண் டாய்.”, “தேசவிளக்கெலாம் ஆனாய் நீயே.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'தூண்டா விளக்கின் நற்சோதி.", "ஞான விளக்கொளியாம் ஊன் உயிரை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், சோதியே கட்டு, சூழொளி விளக்கே.', தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ.” என்று மாணிக்க வாசகரும், ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே. என்று திருமாளிகைத் தேவரும், 'மதிப்பவர் மனமணி விளக்கை." என்று சேந்தனாரும், "தூண்டு விளக்கேய்ப்ப.' என்று பூந்துருத்தி நம்பிகாட நம்பியும், ஞானச் சுடர் விளக்கை', 'எழிலாரும் கவுணி வர் பேண்.', 'க வு னி யர் கள் குலதீப சுபக்ரிதன்.",