பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 241

இந்தப் பாடல் குளகம். வண்டு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். இரைந்து-மொய்த்துக் கொண்டு ரீங்காரம் செய்து, எழு-மேலே எழுகின்ற. செழு-நிறச் செழிப்பைப் பெற்ற. மலர்-பல வகையான மலர்கள் : ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன : மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், அல்லி மலர், ஆ ம் ப ல் ம ல ர், குமுத மலர், செங்கழு

நீர் மலர், நீலோற்பல மலர், பவளமல்லிகை மலர், வில்வ மலர், மா மலர், வேப்ப மலர், சூரியகாந்தி மலர், வாகை மலர், வேங்கை மலர், சண்பக மலர், அரளி

மலர், மஞ்சட் செவ்வந்தி மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர், தாழம்பூ, நுணா மலர், நந்தியாவட்டை மலர் முதலி யவை. ப்: சந்தி. பிறங்கலும்-குவிந்திருக்கும் மலையையும். மணியும்-மாணிக்கங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். ஆரமும்-சந்தன மரத்தையும். உந்தி-தள்ளிக் கொண்டு. த் சந்தி. தண்டலை-பூம்பொழிலில் உள்ள ப்: சந்தி. பல-பலவாகிய, வளத்தொடும்-மலர்கள், காய்கள், கனிகள், விதைகள் முதலிய வளங்களோடும்; ஒருமை பன்மை மயக் கம். வரு-ஓடி வரும். புனல்-கொள்ளிட ஆற்றின் நீர். தாழ்ந்து-தங்கி. சேவடி-தம்முடைய செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகளை. அடி: ஒருமை பன்மை மயக்கம். தாழ்-சேர்ந்து வருட தி: சந்தி, தெண்-தெளிவைப் பெற்ற திரை-அலைகளை வீசும்; ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கடல்-சமுத்திரத்தில் தோன்றும், பவளமும்-பவளங்களையும்; ஒருமை பன்மை .மயக்கம். பணிலமும்-சங்குப் பூச்சிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். செழு-செழிப்பைப் பெற்ற, மணி-மாணிக் கங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. திரள்திரட்சியாக உள்ள முத்தும்-முத்துக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். கொண்டு-வாரிக் கொண்டு. இரட்டி. மாறி மாறி ஒலித்து. உந்து-தள்ளும். ஒதம்-கடலில் வீசும் அலைகள்; ஒருமை பன்மை மயக்கம். அங்கு-அந்த இடத்

புெ-10-16