பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பெரிய புராண விளக்கம்-10

நிற்கும் பூம்பொழிலில் நின்று கொண்டு அந்த மயில்கள் நடனமாடுபவைகளாக இருக்கும். பாடல் வருமாறு:

கலவ மென்மயில் இனம்களித் தழைத்திடக்

கடிமணக் குளிர்கால்வக்

துலவி முன்பணித் தெதிர்கொளக் கிளர்ந்தெழுங்

துடன் வரும் சுரும்பார்ப்ப

இலகு செந்தளிர் ஒளிநிறம் திகழ்தர

இருகுழை புடையாட

மலர்மு கம்பொலிங் தசையமென் கொம்பர்கின்

றாடும் மலர்ச்சோலை.'

கலவ. அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்திற்கு எழுந்தருளிய சமயத்தில் தோகைகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான. மயில்-மயில்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். இனம்கூட்டம், களித்து-களிப்பைப் பெற்று. அழைத்திட-தம்மை வரவேற்று அழைக்க. க், சந்தி, கடிமண-மிக்க நறுமணம் கமழும். க், சந்தி. குளிர்-குளிர்ச்சியைப் பெற்ற, கால்தென்றற் காற்று. வந்து உலவி-வீசி வந்து உலாவி. முன்தமக்கு முன்னால், பணிந்து-தம்மை வணங்கி, எதிர் கொளஎதிர் கொண்டு வரவேற்க. கொள: இடைக்குறை. க்: சந்தி. கிளர்ந்து-கி ள ர் ச் சி ைய அடைந்து. எழுந்து-மேலே பறந்து எழுந்து. உடன் வரும்-தம்மோடு வரும். சுரும்புவண்டுகள் : ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பு-ரீங்காரம் செய்ய, இலகு-விளங்கும். செந்தளிர்.பல வகையான மரங் களில் விளங்கும் சிவந்திருக்கும் தளிர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. ஒளி. பிரகாசத் தைப் பெற்ற நிறம்-வர்ணம். திகழ்தர-பொலிய. இருஇரண்டு. குழை-மகரக் குழைகள்; ஒருமை பன்மை மயக்கம். புடை-தம்முடைய இரண்டு திருச்செவிகளினுடைய பக்கங் களில்; ஒருமை பன்மை மயக்கம். ஆட- அசைந்து அசைந்து ஆட, மலர்-செந்தாமரை மலரைப் போன்ற; உவம

கபெயர். முகம்-தம்முடைய திருமுகம். பொலிந்து-தோற்