பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 aெரிய புராண விளக்கம்-10

பிரமபுரி-சீகாழி. உண்டவர்-கு டி த் த ரு ளி ய வ ர கி ய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எழுந்தருளும். சிதம் பரத்திற்கு எழுந்தருளும். அந்நலம்-அந்த நல்ல செயலை. கண்டு-பார்த்து. தெரிந்து கொண்டு' எனலும் ஆம். சேல்சேல் மீன்கள் , ஒருமை பன்மை மயக்கம். அலம்பு-துள்ளிக் குதித்துப் புரளும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற புனல்-நீர் நிரம்பியிருக்கும். தடம்-தடாகத்தில். படிந்து அணைபடிந்து வந்து சேரும். சீத-குளிர்ச்சியைப் பெற்ற மாருதம்" மந்தமாருதமாகிய தென்றற்காற்று. வீச-மெல்ல அடிக்க, ச்.சந்தி, சாலவும். மிகவும். பலகண்-பல கண்களை ஒருமை பன்மை மயக்கம். கண்-அணு. பெறும்-அடைந்திருக்கும். பயன்-பிரயோசனத்தை பெறும்-அடையும். தன்மையில்பான்மையோடு; உருபு மயககம். களி-மகிழ்ச்சியை. கூர்வ போல-மிகுதியாக அடைபவற்றைப் போல. புறம்-அந்தச் சிதம்பரத்திற்கு வெளியிடத்தில் வளர்ந்து நிற்கும். பணைபருத்த அடிமரத்தைப் பெற்ற நறும்-நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்திருக்கும். பூகம்-கமுக மரங்கள்: ஒருமை பன்மை மயக்கம். அசைந்து-அசைந்து அசைந்து. இருஇரண்டு. புடை-பக்கங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மிடைந்து-செறிந்து. ஆடின-ஆடிக் கொண்டிருந்தன.

ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர்: "புனவாயில் போற்றிசெய்து வணங்கினார் உலகுய்ய ஞானம் உண்டார்.", 'உலகுய்ய உலவாத ஞானம் பெற்றார்.' என்று சேக்கிழார் பாடியருளியவற்றைக் காண்க. -

பிறகு வரும் 152-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பிறப்பைப் போக்கியருள்பவராகிய நடராஜப் பெரு மானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தில்லையாகிய சிதம்பரத்தைச் சுற்றியுள்ள எல்லையில் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் புரியும் யாகங்களில் சிவபெருமானை வழங்கும் பிரயோசனத்தைப் பெற்ற நெய், சமித்துக்கள், அன்னம் முதலிய ஆகுதிகளை அபாகத்தியில் சொரிந்ததனால் எழுந்த செழுமையைப் பெற்ற