பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 8 பெரிய புராண விளக்கம்-10

பழமையாகிய சிவத்தலத்திற்கு உருபு மயக்கம். தென் திசை. தெற்குத் திசையில் உள்ள. த்:சந்தி. திருவாயில். அழகிய வாசலினுடைய எல்லை-எல்லையை. நீங்கி-விட்டு விட்டு அகன்று. உள்-நடராஜப் பெருமானார் எழுந்தருளி கயிருக்கும் திருக்கோயிலுக்கு உள்ளே. புகுந்து-நுழைந்து. இரு-இரண்டு. மருங்கும்-பக்கங்களிலும் ஒருமை பன்மை மயக்கம். நின்று-நின்று கொண்டு. எடுக்கும்.பக்தர்கள் தொடங்கிக் கூறும். பக்தர்கள்:தோன்றா எழுவாய். ஏத்து ஒலி-துதிகளினுடைய ஓசை; ஒருமை பன்மை மயக்கம். ஏத்து:முத்னிலைத் தொழிற்பெயர். குழ-சுற்றி அமைய, மல்லல்-சரக்குக்களின் வளப்பம் பொருந்திய, ஆவண மறு கிடை-கடைகள் அமைந்திருக்கும் வீதியை. க்:சந்தி. கழிந்து-கடந்து. போய்-அப்பால் எழுந்தருளி. மறையவர்தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும்; ஒருமை பன்மை மயக்கம. நிறை-வளம் நிறைந்த வளம்-செல்வ வளம், மக்கள் வளம் முதலியவை. வாழ்க்கை-தங்களுடைய வாழ்க்கைகளை நடத்தும்; ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தொல்லை-பழையவை ஆகிய. மாளிகை-திருமாளிகை களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிரை-வரிசையைப் பெற்று விளங்கும். த்:சந்தி. திருவீதியைதிருவீதியில், உருபு மயக்கம். தொழுது-இருந்தபடியே நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. அணைந்தனt-பிறகு திருக்கோயிலுக்கு உள்ளே நுழைந்தார்.

பிறகு வரும் 157-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"மலர்ந்து அமைந்த பெருமையோடு விளங்கும் பிரகாசம் குளிர்ச்சியை வழங்கச் சைவ சமயத்தினுடைய விபூதியின் நறுமணம் கமழ்ந்து வெண்மையாகிய புழுதி மாறிப்போம் சிலம்புகள் ஒலிக்கும் செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகளைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானார் திருநடனம் புரிந்தருளும் சிறப்பான பான்மை யினால் திருத்தொண்டுகளைப் புரிவதில் கலந்திருக்கும் பக்தராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய