பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 267 "

நேரில். பெற-அடையுமாறு. வரும்-அடியேனுக்கு உண் டாகும். சிவபோகத்தை-சிவபெருமான் திருவருளால் வரும்: பேரின்பமாகிய போகத்தை. ஒழிவு-இடையில் நிற்றல். இன்றி. இல்லாமல். உருவின்கண்-அடியேனுடைய வடி வத்தில். அணையும்-அடைந்திருக்கும். ஐம்பொறி.மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்னும் ஐந்து இந்திரியங் களினுடைய. பொறி:ஒருமை பன்மை மயக்கம். அளவினும்அளவுக்கு உள்ளும். எளிவர-எளிதாக வருமாறு. அருளினைதேவரீர் திருவருளை வழங்கினிர்; ஒருமை பன்மை மயக்கம் என-என்று அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு: இடைக்குறை. ப்:சந்தி, போற்றி-அந்த நடராஜப் பெருமானாரை வாழ்த்தி வணங்கி. இணை-தனக்கு ஒப்பாக வேறு எதுவும். இல்-இல்லாத கடைக்குறை. வண்-வள்ளன் மையாகிய, பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். கருணை-அந்தப் பெருமானார் வழங்கிய கருணையை எண்ணி. ஏ.அசைநிலை. ஏத்தி-அந்தப் பெருமானாரைத் துதித்து. முன்-அந்தப் பெருமானாருடைய சந்நிதியில். எடுத்த-தாம் பாடியருளத் தொடங்கிய சொல்-சொற். களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். பதிகத்தில்-ஒரு திருப்பதிகத்தில். புணரும்-சேர்ந்து அமைந்திருக்கும். இன்இனிய இசை-இசைப்பாடலை. பாடினர்.அந்த நாயனார் பாடியருளினார். ஆடினர்-கூத்தாடினார். விழி-தம்முடைய கண்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். மாரி-ஆனந்தக் கண்ணிர் நிரம்பிய மழையை. பொழிந்தனர்-சொரிந்தார். . அவ்வாறு அந்த நாயனார் பாடியருளிய திருப்பதிகத்தில் உள்ள ஒரு பாசுரம் வருமாறு:

' கற்றாங் கெரியோம்பிங் கவியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்மேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே. பற்றா நின்றாரைப் பற்றா பாவுமே."

இது குறிஞ்சிப்பண் அமைந்த பாசுரம்.