பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$74 - பெரிய புராண விளக்கம்-10

பெருமையைப் பெற்று விளங்கும். தவங்கள்-தவங்களி னுடைய பயனை ஆகு பெயர். நல்கும்-வழங்கும். திரு. அழகிய. வீதி நான்கும்-கிழக்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி என்னும் நான்கு வீதிகளுக்கும். வீதி: ஒருமை பன்மை மயக்கம். தொழுது-எழுந்தருளி மீண்டும் ஒருமுறை அந்த நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. அங்கண்-அந்தச் சிதமபரத்தில். அல்கும்.தங்கிக் கொண்டி ருக்கும். திறம்-வகையாகிய செயலுக்கு. அஞ்சுவார்.அந்த நாயனார் அச்சத்தை அடைபவரானார்.

பிறகு உள்ள 166-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "கழுமலமாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய பாசுபதேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவேட்களத்திற்குச் சிதம்பரத்திலிருந்து எழுந்தருளித் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பி அந்தப் பாசுபதேசுவரரைக் கும்பிட்டு விட்டுச் சொற் கள் அடங்கிய ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடி யருளித் தாம் தங்கிக் கொண்டருளும் தலம் அந்தத் திருவேட் களமாக அங்கே இருந்தபடியே சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் ஐயனாகிய நடராஜப் பெருமான் புரிந்தருளும் அழகிய ஆனந்தத் தாண்டவத்தைக் கும்பிட்டு விட்டு அந்தத் திருவேட்களத்தில் தங்கிக் கொண்டிருக்கும் காலத்தில். பாடல் வருமாறு:

செய்ய சடையார் திருவேட் களம்சென்று கைதொழுது சொற்பதிகம் ப்ாடிக் கழுமலக்கோன் வைகி அருளுமிடம் அங்காக மன்றாடும் ஐயன் திருக்கூத்துக் கும்பிட் டணைவுறும்நாள்.' இந்தப் பாடல் குளகம். கழுமல-கழுமலமாகிய சீகாழி யில் திருவவதாரம் செய்தருளிய. க்:சந்தி. கோன்-அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்: ஒருமை பன்மை