பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - - பெரிய புராண விளக்கம்-10,

தமிழும்-செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத். தையும். பாடினார்.அந்த நாயனார் பாடியருளினார்.

திருக்கழிப்பாலை: இது சோழ நாட்டில் உள்ள சிவத், தலம். லங்கே கோயில் கொண்டிருப்பவர் பால்வண்ண நாதேசுவரர். அம்பிகை வேதநாயகி. இந்தத் தலம் சிதம் பரத்திற்குத் தென் கிழக்குத் திசையில் ஏழுமைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் இருந்த கோயிலைக் கொள்ளிட, ஆறு அடித்துக் கொண்டு போய் விட்டமையால் அந்தத். தலத்தில் இருந்த பால்வண்ணநாதேசுவரரை இந்தக் காலத்தில் சிதம்பரத்திற்குத் தென்கிழக்குத் திசையில் 2 மைல் தூரத்தில் உள்ள சிவபுரி என்னும் தலத்தில் ஒரு தனி ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த ஆலயம் சிறியது. சிவலிங்கப் பெருமான் சிறிய வடிவத்தை உடைய வராய் வெண்மை நிறத்தைப் பெற்றவராய் விளங்குகிறார். அதனால் அவருக்குப் பால்வண்ணநாதேசுவரர் என்ற திருநாமம் உண்டாயிற்று. இது வன்மீக முனிவர் வழிபட்ட தலம். இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு. பாசுரம் வருமாறு: -

புனலாடிய புன்சடை யாய் அரணம்

அனலாக விழித்தவ னே அழகார் கனலாட வினாய்கழிப் பாலையுளாய் உணலார்கழல் கைதொழு துள்குதுமே.” இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் கெளசிகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

' மண்ணி னார்மலி செல்வமும் வானமும்

எண்ணி நீரினி தேத்துமின் பாகமும் பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக் கண்ணி னாருறை யும்கழிப் பாலையே." இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: