பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

は234 பெரிய புராண விளக்கம்-10

மயக்கம். த்:சந்தி. தோன்ற-காட்சியளிக்க. க்:சந்தி. கண்டு. அந்தக் காட்சியைத் தாம் பார்த்து. தாம் என்றது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. அப்பரிசு-அந்த இயல்பைப் பெற்ற காட்சியை பெரும்பாணர்க்கும்-திருநீல கண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாருக்கும். காட் டினார்-காண்பித்தருளினார்.

பின்பு வரும் 171-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

செல்வம் தங்களிடமிருந்து பிரிதலை அறியாத தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் வரம்பு இல்லாத சீர்த்தியைப் பெற்ற சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய இளைய ஆண் சிங்கத்தைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்திற்கு எழுந் தருளி விரைவில் தம்மை வணங்குவதற்கு முன்னால் தாமும் அவர்களை உடனே வணங்கி வளப்பத்தைப் பெற்ற அழகிய ஒரு தெருவினுடைய பக்கத்தை அடைவதற்காக அவர்கள் இருசாராரும் வந்தார்கள். பாடல் வருமாறு:

' செல்வம் பிறிவறியாத் தில்லைவாழ் அந்தணரும்

எல்லையில்சீர்ச் சண்பை இளவே றெழுந்தருளி ஒல்லை இறைஞ்சாமுன் தாமும் உடனிறைஞ்சி மல்லல் அணிவீதி மருங்கணைய வந்தார்கள். '

செல்வம்-தங்களிடத்தில் உள்ள செல்வம். பிறிவுதங்களிடமிருந்து பிரிதலை, அறியா-அறியாத த் சந்தி. தில்லைவாழ் அந்தணரும்-தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும். அந்தணர்: ஒருமை பன்மை மயக்கம். எல்லை-வரம்பு. இல்-இல்லாத கடைக்குறை. சீர்-சீர்த்தி யைப் பெற்ற, ச்: சந்தி. சண்பை-சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய, இளஏறு-இளைய ஆண் சிங்கத் தைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய .ணார்; உவம ஆகுபெயர். எழுந்தருளி-சிதம்பரத்திற்கு எழுந்தருளி. ஒல்லை-விரைவில். இறைஞ்சாமுன்-தம்மை வணங்குவதற்கு முன்பே. தாமும் என்றது திருஞான