பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.2 δο பெரிய புராண விளக்கம்-10

.யின் மேல். குவித்த-கூப்பி நடராஜப் பெருமானாரைக் கும்பிட்ட பங்கயத்தின்-செந்தாமரை மலர்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். செவ்வி பழித்து-செவ்வையான அழகைப் பழித்து. வனப்பு-எழில். ஓங்கும்-ஓங்கி விளங்கும். செங்கையொடும்-சி வ ந் தி ரு க்கு ம் திருக்கரங்களோடும்: ஒருமை பன்மை மயக்கம், சென்று-எழுந்தருளி, திருவாயி லுள்-நடராஜப் பெருமானார் எழுந்தருளியிருக்கும் திருக் கோயிலுக்கு முன்னால் உகரமாக நிற்கும் அழகிய கோபுர வாசலுக்குள். புக்கார்-துழைந்தார்.

- திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குச் சிங்கம் உவமை: 'பொங்குபுனிற்றண் புகவி வந்த பூசுரர் சிங்கமும்., 'காழியினில் வந்த கவுணியர்தம் போரேற்றை.’’ என்று சேக்கிழாரும், "விரவும்பர சமய கோளரி.', 'புகலித் தாளரிக்கும் அரியான் அருள் பெற்ற பரசமய கோளரிக்கு., 'பரமகுருநாதன் மிகுபரசமய கோளரியே.'", "கவுணியர்தம் போரேறு." என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளி

யவற்றைக் காண்க.

பிறகு உள்ள 173-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஒரும்ைப் பாட்டை அடைந்த தம்முடைய திருவுள்ளம் பக்தியினால் உருக்கத்தை அடைய உயரமாக விளங்கும் மேருமலையைப் போன்ற பேரம்பலத்தினுடைய பக்கத்தில் இருந்தபடியே அந்த நடராஜப் பெருமானாரைக் கும்பிட்டு விட்டுச் சிதம் பரத்தில் உள்ள திருக்கோயிலில் இருக்கும் திருச்சிற்றம் பலத்தில் திருவருள் நிரம்பித் திருநடனம் புரிந்தருளும் மாணிக்கக் கூத்தருடைய சந்நிதிக்கு எழுந்தருளித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அடைந்து தரையில் விழுந்து நடராஜப் பெருமானாருடைய சந்நிதிக்கு முன்னால் உள்ள திருக்களிற்றுப்படியின் கீழே வணங்கினார். பாடல் வருமாறு: -