பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பெரிய புராண விளக்கம்-10

பொருட்டு அந்த நடராஜப் பெருமானாரிடம் பிரியாத இயல்பை உடைய விடையைப் பெற்றுக் கொண்டு தங்கத் தகடுகளால் வேயப் பெற்ற திருச்சிற்றம்பலத்தைச் சுற்றி வலமாக வந்து தரையில் விழுந்து அந்த நடராஜப் பெரு மானாரை மீண்டும் ஒரு முறை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு மேலே எழுந்தருளி திருக்கோயிலுககு வெளியில் உள்ள முற்றத்தை அந்த

நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு:

இன்ன தன்மையில் இன்னிசைப் பதிகமும்

திருக்கடைக் காப்பேத்தி

மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தெதிர்

வந்துமுன் கின்றாடும்

பின்னு வார் சடைக் கூத்தர்பே ரருள் பெறப்

பிரியாத விடைபெற்றுப் י -

பொன்னின் அம்பலம் சூழ்ந்துதாழ்ந் தெழுந்துபோக்

தணைந்தார் புறமுன்றில்.'

இன்ன-இத்தகைய. தன்மையில்-பான்மையோடு உருபு மயக்கம். இன்-இனிய இசை-உரிய பண் அமைந்த, ப்: சந்தி. பதிகமும்-ஒரு திருப்பதிகத்தையும். திருக்கடைக் காப்பு-அந்தத் திருப்பதிகத்தில் உள்ள இறுதிப் பாசுரத்தில் தம்முடைய திருநாமத்தை வைத்துப் பாடியருளிய திருக் கடைக் காப்பையும். ஏத்தி-பாடி யருளி நடராஜப் பெரு மானாரைத் துதித்து வணங்கி. மன்னும்-நிலைபெற்று விளங்கும். ஆனந்த வெள்ளத்தில்-பேரானந்தப் பெருவெள் ளத்தில். திளைத்து-முழுகி இன்புற்று. எதிர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானா இருடைய சந்நிதிக்கு வந்து-எழுந்தருளி. முன்-தமக்கு முன்னால், நின்று-நின்று கொண்டு. ஆடும்- திருநடனம் புரிந்தருளும். பின்னு-பின்னிய. வார்-நீளமான, சடை சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற்பெற்ற வராகிய, வினையாலணையும் பெயர். க்: சந்தி, கூத்தர். ஆனந்தத் தாண்டவ மூர்த்தியார். பேரருள்-வழங்கும் பெரு