பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 295

இன்பத்தை அடைந்து கற்பதற்கு அருமையாக இருக்கும் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்ற வரும், சிறிய மிக்க இளம் பருவத்தை உடைய ஆண் யானை யைப் போன்றவரும் ஆகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அந்தத் திருஎருக்கத்தம்புலியூருக்கு எழுந்தருளிப் பின் வருமாறு திருவாய் மலர்ந்து அருளிச் செய்வாரானார். பாட ல் வருமாறு:

' இருந்த டங்களும் பழனமும் கடந்துபோய்

எருக கத்தம் புலியூரின் மருங்கு சென்றுற நீலகண் டப்பெரும் பாணனார் வணங்கிக், கார் கெருங்கு சோலைசூழ் இப்பதி அடியனேன்

பதி' என நெடி தின்புற் றருங்க லைச் சிறு மழ இளங் களிறனார் அங்கணைங் தருள் செய்வார்.' இரும்-பெரியவையாக இருக்கும். தடங்களும்-தடாகங் களையும. பழனமும்-வயல்களையும்; ஒருமை பன்மை மயக் கம். கடந்து-தாண்டி. போய்-அப்பால் எழுந்தருளி, எருக்கத் தம் புலியூரின் திருஎருக்கத் தம்புலியூருக்கு. பருங்கு-பக்கத் தில், சென்று உற-எழுந்தருளிச் சேர. நீலகண்டப் பெரும் பாணனார்-திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாய னார். வணங்கி-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பணிந்து விட்டு. ச. சந்தி. கார்-மேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். நெருங்கு-நெருக்கமாகத் தவழும். சோலை. பூம்பொழில். சூழ் சுற்றியிருக்கும். இப்பதி-இந்த ஊர். அடியனேன்-அடியேன் பிறந்த பதி-ஊர். என- என்று அந்த பெரும்பாணனார் கூற; இடைக்குறை, நெடிது.நெடுநேரம். இன் புற்று-இன்பத்தை அடைந்து. அரும்-கற்பதற்கு அருமை யாக இருக்கும். கலை- அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்றவரும்: ஒருமை பன்மை மயக் கம்: வினையாலணையும் பெயர். அந்தக் கலைகள் இன்ன எனபதை வேறு ஓரிடத்தில் கூறினோம் ஆண்டுக் கண்டுணர்க. ச்: சந்தி. சிறு-சிறிய. மழ,இளம்-மிக்க இளம்