பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 297

மைகொள் கண்டர் தம் கோயிலி னுட்புக்கு

வலங்கொண்டு வணங்கிப்பார்

உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப் பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்."

ஐயர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனாரை நோக்கி. ஐயரே: விளி. நீர்-தேவரீர். அ த ரி த் தி ட - திருவ வதாரம் செய்தருள, இப்பதி-இந்தச் சிவத்தலமாகிய திரு எருக்கத் தம்புலியூரில் வாழும் மக்கள்; இடஆகுபெயர். அளவு இல்-அளவு இல்லாத. இல்: கடைக்குறை. மா-பெரு மையைப் பெற்று விளங்கும். தவம்-தவத்தை. முன்பு-முன் பிறவியில், செய்தவாறு-புரிந்ததனுடைய பயன் அன்றோ? என-என்று இடைக்குறை, ச். சந்தி. சிறப்பு-அந்தப் பெரும் பாணருடைய சிறப்பை. உரைத் தருளி-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அச்செழும்பதி-அந்தச் செல்வச் செழிப்பைப் பெற்ற சிவத்தல மாகிய திருஎருக்கத்தம்புலியூரில், இடம். தாம் திருக்கோ :பில் கொண்டு எழுந்தருளும் இடமாக. கொண்ட-ஏற்றுக் கொண்டருளிய. மை-மையைப் போன்ற கரிய நிறத்தைப் பெற்ற உவம ஆகுபெயர். கண்டர்தம்-திருக்கழுத்தைப் பெற்றவராகிய நீலகண்டே சுவரர், தம்: அசை நிலை. ேக யி லி னு ள்-எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு உள்ளே. புக்கு-நுழைந்து. வலம் கொண்டு-பிறகு வெளியில் எழுந்த ருளி அந்த ஆலயத்தை வலமாக வந்து, வணங்கிமீண்டும் அந்த ஆலயத்துக்குள் எழுந்தருளி அந்த நீலகண்டே சுவரரை மறுபடியும் ஒரு முறை பணிந்து. ப்: சந்தி. பார்இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்; இடஆகுபெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். வந்தவர்சீகாழியில திருவவதாரம் செய்தருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். செழும்-சொற்சுவை, பொருட் சுவை என்னும் செழிப்பைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. ப்:சந்தி. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை.