பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரிய புராண விளக்கம்-10

வீற்றிருந்த தலைவனாகிய தோனியப்பன் வழங்கிய திரு வருளை வாழ்த்தி வணங்கி விட்டுத் தம்முடைய திருவுள்ளத் தில் மூண்டு எழும் மகிழ்ச்சியோடு தங்களுடைய முதல் சாத். திரங்களாகிய வேதங்கள் என்னும் சாத்திரங்கள் விதித்த முறைப்படி உள்ள மங்கல காரியங்களை நட்சத்திரங்களைப் பெற்ற பத்து மாதங்களிலும் நன்மைகள் சிறந்து விளங்கத் தம்முடைய உறவினர்களோடு அந்தச் சிவபாத இருதயர் உரிய மங்கல காரியங்களைச் செய்து பேரானந்தத்தோடு கிளர்ச்சியைப் பெற்று வாழும் காலத்தில், பாடல் வருமாறு:

" ஆளுடையா ளுடன்தோணி அமர்ந்தபிரான்

அருள்போற்றி மூளும்மகிழ்ச் சியில்தங்கள் முதல்மறைநூல்

முறைச்சடங்கு நாளுடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக் கேளிருடன் செயல்புரிந்து பேரின்பம்

கிளர்வுறுநாள்." இந்தப் பாடலும் குளகம். ஆள்-பக்தர்களைத் தன்னும் டைய அடிமைகளாக; ஒருமை பன்மை மயக்கம். உடையா ளுடன்.பெற்றவளாகிய பெரிய நாயகியோடு.தோணி-சீகாழி யில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் விளங்கும் ஒரு சிட்டு மலையின் மேல் இருக்கும் தோணியில். அமர்ந்தவிற்றிருந்த பிரான்-தலைவனாகிய தோனியப்பன். அருள்வழங்கிய திருவருளை.போற்றி-வாழ்த்தி அந்தத் தோணியம் பரை வணங்கி விட்டு. மூளும்-தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டி எழும்.மகிழ்ச்சியில்-மகிழ்ச்சியோடு; உருபு மயக்கம். தங்கள் தங்களுடைய, என்றது அந்தணர்களுடைய’ என்ற படி முதல்-முதற் சாத்திரங்களாகிய, ஒருமை பன்மை மயக் கம். மறை-வேதங்கள் என்னும்; ஒருமை பன்மை மயக்கம். தால்-சாத்திரங்கள்விதித்த ஒருமை பன் மை மயக்கம்.முறைமுறைப்படி உள்ள ச்: சந்தி. சடங்கு-மங்கல காரியங்களை, இருமை பன்மை மயக்கம், என்றது சீமந்தத்தை நடத்தல்; விருந்து அளித்தல் முதலியவை. நாள்-நட்சத்திரங்களை.