பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 307

தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, ச்:சந்தி. சொல். சொற்கள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். இருக்குக் குறள்-திருவிருக்குக்குறளாகிய துணை-இரண்டு. மலர்மலர்களை, ஒருமை பன்மை மயக்கம். மொழிந்து-பாடி யருளி. ஏத்தி-அந்தப் பழமலைநாதரை துதித்து விட்டு. ஞானபோனகர்-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆல யத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் தோணியில் வீற்றிருந்தருளும் பெரியநாயகியார் தம்முடைய கொங்கை களிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கிய சிவஞானமாகிய பால் என்னும் விருந்தை நுகர்ந்தவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். நம்பர்தம்-தம்முடைய அடியவர்களுக்குப் பல வகையான நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய அந்த விருத்தாசலேசுவரர். தம்:அசைநிலை. அந்த நம்பிக்கை கள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டு உணர்க. கோயிலை-எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை, நண்ணி-அடைந்து. அங்கு உள்-அந்தத் திருக்கோயிலுக்கு உள்ளே. புக்கு-நுழைந்து. த்:சந்தி. தேன்-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். அலம்பு. ரீங்காரம் செய்யும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற, கொன் றையார்-கொன்றை மலர் மாலையை அணிந்தவராகிய அந்த விருத்தாசலேசுவரருடைய. கொன்றை: ஆகுபெயர். சேவடிசெந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளாகிய. அடி:ஒருமை பன்மை மயககம். திளைத்த-ஆனந்த சாகரத் தில் முழுகி இன் புற்ற. அன்பொடு-பக்தியோடு. தாழ்ந்தார். அந்த நாயனார் தரையில் விழுந்து பழமலைநாதரை வணங்கினார்.

அவ்வாறு அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருக் குக்குறள் வருமாறு:

'இருவர் அறியாத-ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள்-பெருகி நிகழ்வோரே."