பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 32.3

ஐம் பு ல னா ல் மிக்கீர்.” என வருபவற்றைக் காண்க. மா-பெருமையை அடைந்து திகழும். தவத் தோருடன்-தவத்தைப் புரிந்த தவசியர்களோடு; ஒருமை பன்மை மயக்கம். மேவினார்-அந்த நாயனார் எழுந் தருளினார்.

பின்பு வரும் 194-ஆம் பாடவின் கருத்து வருமாறு:

இத்தகைய நிலையில் அழகு வளரும் பூங்தராயாகிய சீகாழியை ஆட்சி புரிந்தருளும் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் கால்களால் நடந்து வழியில் வந்ததனால் உண்டான வருத்தத்தை அன்னப் பறவைகள் விளையாடும் துறையில் நீர் வளம் நிரம்பிய திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப் பவரும், தம்முடைய தலையின் மேல் கங்கையாற்றைத் தங்க வைத்திருப்பவரும் ஆகிய அரத்துறை நாதர் தம் முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து பின்

வருமாறு புரிந்தருளினார். பாடல் வருமாறு:

இங்கி லைக்கண் எழில்வளர் பூக்தராய் மன்ன னார்தம் வழிவருத் தத்தினை அன்னம் ஆடும் துறைமீர் அரத்துறைச் சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர்.'

இந்நிலைக்கண்-இத்தகைய நிலையில். எழில். அழகு. வளர்-வளரும். பூங்தராய்-பூங்தராயாகிய சீகாழியை, மன்னனார்-அரசராகிய திருஞான சமபந்த மூர்த்தி நாயனார். தம் வழி வருத்தத்தினை-தாம் கால்களால் நடந்து வழியில் வந்ததனால் உண்டாகிய வருத்தத்தை. அன்னம்-அன்னப் பறவைகள் ஒருமை பன்மை மயக்கம், ஆடும்-விளையாடும். துறை-துறையில். நீர்-நீர் வளம் நிரம்பிய அரத்துறை-திருநெல்வாயில் அரத்துறையில். ச்: சந்தி. சென்னி-திருக்கோயில் கொண்டு எழுந்தருளி விருப்பவரும் தம்முடைய தலையின் மேல். ஆற்றர். கங்கையாற்றைத் தங்க வைத்திருப்பவரும் ஆகிய ஆரத்