பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பெரிய புராண விளக்கம்.10

சேகரர்-தம்முடைய தலையின்மேல் அணிந்து கொண்டிருப் பவரும் ஆகிய அரத்துறை நாதர். கோயில் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலுக்கு வந்து-அந்த வேதியர்கள் வந்து. எய்தினர்-சேர்ந்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 199-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அவ்வாறு அந்தத் திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்களோடும், மற்றும் உள்ள அரத் துறை நாதர் வழங்கிய திருவருளைப் பெற்ற அடியவர் களோடும் உயர்ந்து நிற்கும் அரத்துறைநாதர் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலுக்குள் இருக்கும் மக்களுக்கும் வியப்பு உண்டாக, 'இந்தத் திருக்கோயிலில் இந்த நிகழ்ச்சி எத்தகைய வியப்பை அளிப்பதாக இருக்கிறது.' என்று கூறுபவர்களாகிய அந்த அடியவர்களாகிய தாங்கள் அந்த வேதியர்களுக்கு முன்னால் பின்வருமாறு கூறினார்கள்." பாடல் வருமாறு :

"ஆங்கு மற்ற அருள் அடி யாருடன்

ஓங்கு கோயிலுள் ளார்க்கும் உண் டாயிட 'ஈங்கி தென்ன அதிசயம்!" என்பவர் - தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.'

ஆங்கு-அவ்வாறு, மற்ற-அந்தத் திருநெல்வாயில் அரத் துறையில் வாழ்ந்து வரும் வேதியர்களோடும் மற்றும் உள்ள. அருள்-அரத்துறைநாதர் வழங்கிய திருவருளைப் பெற்ற. அடியாருடன்-அடியவர்களோடு ஒருமை பன்மை மயக்கம். ஓங்கு-உயர்ந்து நிற்கும். கோயில்-அரத்துறை நாதர் எழுந் தருளியிருக்கும் திருக்கோயிலுக்குள். உள்ளார்க்கும்இருக்கும் மக்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். அவர்கள் பூஜகர்கள், பணிவிடை செய்யும் பணியாளர்கள் முதலியவர் கள். உண்டாயிட-வியப்பு உண்டாக. ஈங்கு-இந்தத் திருக்கோயிலில். இது-இந்த நிகழ்ச்சி: என்றது. அரத்துறை நாதர் கனவில் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்ததை. என்ன-எத்தகைய. ஆ தி ச ய ம்-வியப்பை