பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 3.3%

யார் தம்முடன்-தம்முடைய தகப்பனார்ராகிய சிவபாத இருதயரோடு. தம்: அசைநிலை. பாங்கு-தம்முடைய பக்கத்தில். அமர்-தங்கிக் கொண்டிருக்கும். தொண்டருக்குதிருத்தொண்டர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். அருள் செய்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. தொழா முனம்-அரத்துறை நாதரைத் தாம் வணங்குவதற்கு முன்பே. விண்-ஆகாயம். புலப்பட-தெளிவாகப் புலப் படுமாறு. வீங்க-வீங்கிப் பரவிய. இருள்-இராத்திரி நேரத்தில் இருந்த இருட்டு. நீங்கலும்-அகன்றவுடன்.

பின்பு உள்ள 298-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு :

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் செவ் வந்தி மாலை நேரம், நடுச்சாமம். விடிகிற விடியற்கால நேரம் ஆகிய வேளைகளில் தாம் பணி செய்யும் வேலை களைச் செய்து நிறைவேற்றிவிட்டு வெண்மையான விபூதியைப் பூசிக் கொண்டிருக்கும் அழகைப் பெற்ற திரு மேனியை உடையவராய்த் தம்முடைய திருக்கரங்களாகிய செந்தர்மரை மலர்களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டுப் பிறகு தரையில் விழுந்து அரத்துறைநாதரை வணங்கிவிட்டு அப்பால் பொருந்துமாறு ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தை ஒதிக்கொண்டு தரையிலிருந்து எழுந்தார். பாடில் வருமாறு:

1 மாலை யாமம் புலர்வுறும் வைகறை

வேலை செய்வினை முற்றிவெண் ணிறனி கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித் தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்."

மாலை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் செவ்வந்தி மாலை நேரம். யாமம்-நடுச் சாமமாகிய நள்ளிரவு. புலர்வுறும்-விடியும். வைகறை-விடியற் கால நேரம், வேலை செய்-ஆகிய வேளைகளில் தாம் பணி புரியும். வினை-வேலைகளை ஒருமை பன்மை மயக்கம். முற்றி.

பெ-10-22