பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器需3 பெரிய புராண விளக்கம்-14

செய்து நிறைவேற்றிவிட்டு, வெண்-வெண்மையாக உள்ள. நீறு-விபூதியை, அணி-பூசிக்கொண்டிருக்கும். கோலஅழகைப் பெற்ற. மேனியராய்-திருமேனியை உடைய வராகி. க்:சந்தி, கை:தம்முடைய திருக்கரங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம், ம்:சந்தி. மலர்-செந்தாமரை ம வர் க ைள ஒருமை பன்மை மயக்கம். குவித்து -த ம் மு ைட ய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அரத்துறை நாதரை வணங்கி விட்டு அப்பால் தரையிலிருந்து. ஏலபொருந்துமாறு. அஞ்சு எழுத்து-ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்ச த்தை எழுத்து : ஒருமை பன்மை மயக்கம், ஒதி-ஒதிக்கொண்டு. எழுந்தனர் எழுந்தார். -

அடுத்து வரும் 209-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு, "அறிவையும், சிவஞானத்தையும் பெற்றவரும், புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய பரிசுத் தரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைக் குளிர்ச்சியைப் பெற்ற முத்துக்களால் அமைக்கப் பெற்ற பல்லக்கின் மேல் ஏற்றி விடுவதற்கு விருப்பத்தைக் கொண்டவனைப் போல கருமையாகிய கிழக்குச் சமுத்திரத்தின் மேல் ஏழு பச்சைக் குதிரைகளைப் பூட்டி யிருக்கும் தன்னுடைய இரதத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்து வெம்மையாகிய கிரணங்களை வீகம் சூரியன் சேர்ந்தான்." பாடல் வருமாறு:

" போத ஞானப் புகலிப் புனிதரைச்

சீத முத்தின் சிவிகைமேல் ஏற்றிடக் காதல் செய்பவன் போலக் கருங்கடல் மீது தேரிங்வங் தெய்தினன் வெய்யவன்." போத-அறிவையும். ஞான-சிவஞானத்தையும் பெற்ற வரும்; வினையாலணையும் பெயர். ப்:சத்தி. புகவி-புகவி யாகிய சீகாழியில் தி ரு வ வ தா ர ம் செய்தருளிய,