பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J40 பெரிய புராண விளக்கம்-10

அரத்துறை நாதருடைய பக்தர்களோடு, ஒருமை பன்மை மயக்கம. ஏய-கூடிய. அந்தனர்தாம்-வேதியர். தாம்:அசை நிலை, எதிர்-ஞானசம்பந்தருடைய சந்நிதியில். தோன் றினார்-காட்சி அளித்தார்.

அடுத்து வரும் 211-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : அவ்வாறு வந்து தோன்றிய வேதியர் பெருமையைப் பெற்று விளங்கும் த வத் ைத ப் புரிந்தவராகிய, நறுமணம் கமழும் பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும் நீண்ட பூஞ்சோலையைப் பெற்ற நல்ல சீகாழியை உடைய நாட்டில் தி ரு வ வ தா ர ம் செய்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு முன்னால், 'முடிவு இல்லாத சீர்த்தியைப் பெற்ற திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முதல்வராகிய அரத்துறை நாதர் வழங்கிய பெருமையைப் பெற்றுத் திகழும் திருவருளால் வந்த முத்துப் பல்லக்கு, முத்துக் குடை, பலவகையான சின்னங்கள் ஆகியவற்றைத் தேவரீர் தாங்கியருள்வீராக’ என்று கூறினார்கள்." பாடல் வருமாறு:

வந்து தோன்றிய அந்தணர் மாதவர்

கந்த வார்பொழில் காழிகன் னாடர்முன் அந்த மில்சீர் அரத்துறை ஆதியார் தந்த போருள் தாங்குவீர்' என்றனர்." வந்து தோன்றிய-அவ்வாறு எழுந்தருளி வந்து தோன்றிய. அந்தணர்-வேதியர்கள். மா-பெருமையைப் பெ ற் று வி ள ங் கு ம். தவர்-த வ த் ைத ப் புரிந்த கந்தவார் பொழில்-நறுமணம் கமழும் {_Höß)Glf Gößd% யாக உள்ள மரங்கள் வளர்ந்து நிற்கும் நீண்ட பூஞ். சோலையைப் பெற்ற காழிநன்நாடர்-சீகாழியை உடைய சோழநாட்டில் திருவவதாரம் செய்தருளிய திருஞான சம் பந்த மூர்த்தி நாயனாருக்கு. முன்-முன்னால். அந்தம்-முடிவு. இல்-இல்லாத கடைக்குறை. சீர்.சீர்த்தியைப் பெற்ற,