பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 42 பெரிய புராண விளக்கம்-10,

இடத்தில், ஒழியாமை-விட்டு விடாமல். உரைத்து-கூறி விட்டு. முன்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாக னாருக்கு முன்னால், நின்று-நின்று கொண்டு. போற்றி. அந்த நாயனாரை வாழ்த்தி. த்: சந்தி. தொழுதிட -வணங்க, நேர்ந்தது-இவ்வாறு அடியேனுக்கு முத்தும் பல்லக்கு, மு. த் து க் கு ைட, பல வகையாக உள்ள சின்னங்கள் ஆகியவை கிடைக்க நேர்ந்தது. மன்றுளார். சிதம்பரத்தில் உள் ள திருக்கோயிலில் வி ள ங் கு ம் திருச்சிற்றம்பலத்தில் எழுத்தருளியிருப்பவராகிய நடராஜம் பெருமானார். உளார்: இடைக்குறை. அருள்-வழங்கிய திருவருளினால். என்று-என அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு, வணங்கினார்-அந்த நடராஜம் பெருமானாரைப் பணிந்தார்.

பின்பு வரும் 213-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். 'எந்தை ஈசன்' என்று தொடங்கி, "இந்தத் திருவருள் அடியேனுக்கு வந்து கிடைத்தவாறு எந்த வண்ணமோ?" எனத் தம்முடைய திருவுள்ளத்தில் எண்ணிப் பாடியருளும் ஒரு திருப்பதிகத்தில் உள்ள பண்ணினை தம்முடைய அறிவு திருப்தியடையுமாறு பரடியருளி அந்த அரத்துறை. நாதருடைய சந்நிதியில் நின்று கொண்டு அத்த நாதரை வாழ்த்தி வணங்குபவரானார். பாடல் வருமாறு: 1. எங்தை ஈசன் என எடுத், திவ்வருள் வந்த வாறுமற் றெவ்வண மோ? என்று சிந்தை செய்யும் திருப்பதி கத்திசை புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.' . 'எந்தை ஈசன் என எடுத்து- எந்தை ஈசன் என்து. தொடங்கி, என: இடைக்குறை. இவ்வருள்-இந்த அரத் துறைநாதர் வழங்கிய திருவருள். வந்தவாறு-அடியேனுக்கு வந்து கிடைத்தவாறு மற்று: அசை நிலை. எவ்வணமோ"எந்த வண்ணமோ? வணம்:இடைக்குறை. என்று-எண. சிந்தை-தம்முடைய திருவுள்ளத்தில். செய்யும்-எண்ணிம்