பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 345

' மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்

தம்மை உன்னும் பரிசுதக் தாள்பவர் செம்மை கித்தில் யானச் சிறப்பருள் எம்மை ஆளுவப் பானின் றளித்ததே."

மெய்ம்மை.அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் உண்மையை, போற்றி-பாதுகாத்து. விடாதஅதை விட்டு விடாத. விருப்பினால்-விருப்பத்தோடு; உருபு மயக்கம். தம்மை என்றது . அரத்துறைநாதரை' என்பதை. உன்னும்-தியானம் புரியும். பரிசு-இயல்பை. தந்து-வழங்கி பருளி. ஆள்பவர்-அடியேனை ஆளாகக் கொள்பவராகிய அரத்துறை நாதர். ஆள்-அடிமை. செம்மை-சிறப்பைப் பெற்ற, நித்தில-முத்துக்களால் செய்யப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். யான-பல்லக்காகிய வாகனம் என்னும். சிறப்பு-சிறந்த பொருளை. அருள்-அடியேனுக்கு வழங்கி யருளும் முத்துப் பல்லக்கு, முத்துக் குடை, பலவகையாக உள்ள சின்னங்கள் ஆகியவை: ஆகுபெயர். எம்மைஅடியேங்களை; இது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. ஆள்-ஆட்களாக ஏற்றுக்கொண்டு; ஒருமை பன்மை மயக்கம். உவப்பான்-மகிழ்ச்சியை அடையவேண்டி அரத்துறைநாதர். இன்று-இன்றைக்கு. அளித்ததே -வழங்கியருளியவையே ஆகும்; ஒருமை பன்மை மயக்கம். அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திரு நெல்வாயில் அரத்துறையைப் பற்றித் தாம் பாடியருளிய திருப்பதிகத்தை நிறைவேற்றிய இறுதிப் பாசுரம் வருமாறு:

' கறையி னார்பொழில் சூழ்ந்த

காழியுள் ஞானசம்பந்தன் அறையும் பூம்புனல் பரந்த

அரததுறை அடிகள்தம் அருளை முறைமை யாற்சொன்ன பாடல்

மொழியும் மாந்தர் தம் வினைபோய்ப் பறையும் ஐயுற வில்லை

பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.”