பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வம்பறா வரி வண்டுச் சருக்கம் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் புராணம் முதற்பகுதி 1-216 வரை உள்ள செய்யுள்கள்

சோழ நாட்டில் சீர்காழி என்னும் திருப்பதியில் அருமறை வல்ல அந்தணர் குல சிகாமணியாகிய சிவபாத இருதயர்க்கும்- அவர் தம் கற்பின் வழாப் பொற்புடைத் துணைவியார் பகவதியார்க்கும் இறைவன் திருவருளால் சைவ வைதிகம் தழைக்க, தமிழ் செய்த தவம் நிரம்ப, தென் திசை வென்றேற, தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல, சிவம்பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார்.

உரிய சடங்குகள் அவ்வப்போது செய்விக்கப் பெற்றுக் குழலிப்பருவத்தே விளையாட்டயர்ந்தார். மூன்றாவ தாண்டு வந்து எய்தியது. ஒரு நாள் தந்தையார் சிவபாத இருதயர் காலை நியமம் முடித்தற்கு நீர்த்துறையில் முழுகு வதற்குச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்து அழுது பற்றினார் பிள்ளையார். உ. ட ன் கொண்டேகினார் தந்தையார்.

பிள்ளையாரைக் கரையில் வைத்துக்குளத்தில் இறங்கி முழுகினார் தந்தையார். தந்தையாரைக் காணாத பிள்ளையார் திருத்தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப்பா' என அழுதார். சிவபெருமான் உமாதேவியாரோடு வானிடை விடைமேல் எழுந்தருளி குளத்தின் அருகில் வந்தார். அழுகின்ற பிள்ளையாரைப் பார்த்தார். தம் அருகிருக்கும் அம்மையைப் பார் த் து, நின்திரு முலைப்பாலைப் பொன் வள்ளத்துப் பெய்து குழந்தையை உண்பிக்க' என அருளினார்.

சிவஞானத்தோடு இனிய பாலைக் குழைத்தருளி உண்க என அம்மையார் ஊட்ட உண்டு தேக்கெறிந்தார்