பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் . 岔置

தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளில் உள்ள சிவத் தலங்கள்: ஒருமை பன்மை மயக்கம்: ஆகுபெயர். அனைத் தின் எல்லாவற்றிலும் உள்ள பெ ரு ைம-பெருமைகள்: ஒருமை பன்மை மயக்கம். எலாம்-யாவும்: இடைக்குறை. தென் திசையே-தெற்குத் திசையில் விளங்கும் சிவத்தலங் களே ஆகுபெயர் வென்று-வெற்றியைப் பெற்று. ஏறமேலும் மேலும் அந்த வெற்றி ஏறி வரவும். மிசை-மேலே உள்ள. உலகும்.தேவலோகத்தையும். பிற-வேறாக உள்ள. உலகுய்-உலகங்களையும்: ஒருமை பன்மை மயக்கம். மேதினியே.இந்தப் பூவுலகமே. தனி-ஒப்பற்ற முறையில், வெல்ல-வெற்றியை அடையவும். அசைவு-தளர்ச்சி, இல்-இல் லாத கடைக்குறை. செழும்-சொற்சுவை, பொருட் சுவை என்னும் செழிப்பைப் பெற்று விளங்கும். தமிழ்- செந்தமிழ் நாட்டில் வழங்கும் ஆகுபெயர். வழக்கே-வழக்கங்கள்ே, ஒருமை பன்மை மயக்கம், அயல்-வேறு நாடுகளில் வழங்கும்: ஆகுபெயர். வழக்கின் வழக்குக்களாகிய துறை-துறையை, வெல்ல-வென்று வெற்றியைப் பெறவும், இசைமுழுதும்சங்கீதம் முழுவதையும் பாடும் சங்கீத விற்பன்னர்களும், திணை மயக்கம். மெய் அறிவும்-உண்மையாகிய சிவஞானத் தைப் பெற்ற ஞானிகளும் திணை மயக்கம். இடம்-திரங்கள் வாழ்வதற்கு உரிய இடங்களாக ஒருமை பன்மை மயக்கம். கொள்ளும்-மேற்கொள்ளும். மலை-நிலைமை. பெருகஅந்தச் சீகாழியில் பெருகவும்.

பிறகு வரும் 25-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'இடைவிடாத முயற்சியைப் பெற்ற படைத்தல் என் னும் தொழிலினுடைய பான்மை தலைமையைப் பெற்று விளங்கவும், பல தினங்களைப் பெற்ற நிகழ் காலமும் வருங் காலமும் குற்றங்களிலிருந்து சீகாழியில் வாழும் மக்கள் நீங்கி இருக்கவும், ஒளியைப் பெற்ற அழகிய தெருக்களில் பக்தர்கள் வளர்ச்சியைப் பெற்று வாழும் சீகாழி என்னும் சிவத்தலத்தில் வாழும் மக்கள் நல்ல வாழ்வைப் பெற்று வாழவும், திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை அடிமை