பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பெரிய புராணத்தின் பத்தாவது பகுதியாக இதில் இருப்பது, திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் முதல் பாகமாகும். இதில் பெற்றோர் மனையறம், திருவவதாரம், குழந்தைப் பருவம், பொய்கைக் கரை அடைதல், சிவஞானம் உணர்தல் முதலிய வற்றிலிருந்து, பெரிய புராணத்தின் இடைப் பகுதியான முத்துச் சிவிகை பெறுதல் வரை ஆசிரியர் விளக்கியுள்ளார். இந்தப் பகுதியி: லுள்ள சில பிழைகளைத் திருத்தி அமைத்து அகராதியையும் அமைத்துத் தந்த வாசே கலாநிதி கி. வா. ஜ. வின் மாணவரான பேராசிரியர் மயிலம் வே. சிவசுப்ரமணியம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-பதிப்பாளர்