பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 63

அடையுமாறு செய்தருளியும். வரு-தம்முடைய திருவுள்ளத் தில் உண்டாகும். மகிழ்வு-மகிழ்ச்சி, தலைசிறப்ப-தலை சிறந்து நிற்க, மற்று: அசைதிலை. அவர்மேல்-அந்தப் பெண் மணிகளின்மேல்; ஒருமை பன்மை மயக்கம். செவ-தாம் ஒட்டும் நடை வண்டியைப் போகுமாறு இடைக்குறை. உகைத்தும்-தள்ளிவிட்டும். உருகி.மனம்-தம்முடைய திருவுள் 3ாம் பக்தியினால் உருக்கத்தை அடைந்து. கரைந்து அலைய கரைதலைப் பெற்று அலைந்து விளங்க. உடன்-அந்தப் பெண் மணிகளோடு, அனைந்து-அவர்களை அனைத்துக் கொண்டு. தழுவியும் தம்முடைய இரண்டு கைகளாலும் தழுவிக் கொண்டும். முன்-முன்னால். பெருகிய-பெருகி எழுந்த இன்பு-ஆனந்தத்தை உற"அந்தப் பெண்மணிகள் அடையுமாறு. அளித்தார்-வழங்கியருளினார். -

பிறகு வரும் 50-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் வளர்ந்து வரும் குழந்தைப் பருவத் தின் முறைப்படி ஓராண்டு நிறைவதற்கு முன்னால் மலர் களைக் கோடுகளைப் பெற்ற வண்டுகள் கிளறும் கருமை யான மென்மையைப் பெற்ற சுருள்களைப் பெற்ற தம் முடைய தலைமயிரினோடு அலையுமாறு நேராக நின்று கொண்டு கிளர்ந்து எழும் கிண்கிணி என்னும் ஒலியை எழுப் பும் கிண்கிணிகள் இனிய நாதத்தை எழும்புமாறு செய்ய கீழான தன்மையைப் பெற்ற வழிகளாகிய சைவ சமயம் அல்லாத வேறு சமயங்களாகிய சமண சமயமும் பெளத்த சமயமும் தளர்ந்து போய் நடந்து ஒழிந்து போகுமாறு தாம் தளர்நடை நடந்தருளினார். பாடல் வருமாறு:

வளர்பருவ முறையாண்டு வருவதன்முன் மலர்வரிவண்

டுளர்கருமென் சுருட்குஞ்சி யுடன்அலையச் செங்கின்று

கிளர்ஒலிகிண் கிணிஎழுப்பக் கீழ்மைநெறிச் சமயங்கள் தளர்நடையிட் உறத்தாமும் தளர்கடையிட்

- டருளினார்."