பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெரிய புராண விளக்கம்.10

மிக்க சிறப்பைப் பெற்ற சைவத்துறை-சைவ சமயத்துறை. விளங்க-விளக்கத்தைப் பெறவும். ப்: சந்தி, பூதபரம்பரை. உயிர்களினுடைய பரம்பரை. பூத:ஒருமை பன்மை மயக்கம். பொலிய-விளங்கவும்.ப்:சந்தி.புனித-தம்முடைய து யதாகிய, வாய்-திருவாயை. மலர்ந்து-திறந்து. அமுத-அ முதருளிய. சித-குளிர்ச்சியைப் பெற்ற,வளபயிர்களின் வளம் நிரம்பிய, வயல்-வயல்களைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். புகவி-புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் புரிந்தருளிய. த் : சந்தி. திருஞான சம்பந்தர்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. பாத-திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். மலர்-செந்தாமரை மலர்களை ஒருமை பன்மை மயக்கம். தலைக்கொண்டு. அடியேம் அடியேமுடைய தலை யின் மேல் வைத்துக் கொண்டு கும்பிட்டுவிட்டு அந்த நாயனாரை வணங்கி, திருத்தொண்டு-அந்த நாயனார் புரிந்தருளிய திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். பரவுவாம்-வாழ்த்திவிட்டு இனிமேல் பாடத் தொடங்கு வோம்.

பின்பு உள்ள 2-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

"பகைவர்கள் ஏறாத கன்னித் தன்மையைப் பெற்ற திருமதிலினுடைய பக்கத்தில் மேகங்கள் நெருங்கித் தவழும் கழுமலமாகிய சீகாழி என்னும் பழைய ஊர் தம்முடைய தலையின் மேல் தங்கியிருக்கும் பிறைச் சந்திரனைப் புனைந் துள்ள சிலம்புகளை அணிந்து கொண்டு விளங்கும் செந் தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளைப் பெற்றவராகிய பிரமபுரீசருக்கு உரிய நிலை பெற்று விளங்கிய சைவசமயத் துறையில் இருந்த சைவர்களினுடைய பரம்பரையில் தோன்றிய குடும்பங்களைப் பெற்ற சோழ மன்னர்களுக்கு உரிய பொன்னைக் கொழிக்கும் காவிரியாறு செல்வ வளத்தையும், வயல்களின் வளத்தையும் வழங்கும் சோழநாடு தோற்றப்பொலிவை அடையுமாறு நிலாவியது."

பாடல் வருமாறு: