பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பெரிய புராண விளக்கம்.10

வளரும், தோனி-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் விளங்கும் கட்டு மலையின் மேல் திகழும் தோணியில் வீற்றிருந்த-அமர்ந்து கொண்டிருந்த திங்கள். பிறைச் சந்திரன், சேர்-சேர்ந்துள்ள சடையார் தம்-சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய தோனியப்பர். தம்: அசைநிலை. திருவருட்கு-வழங்கிய திருவருளைப் பெறும் பொருட்டு. ச்: சந்தி. செய்-புரிந்த, தவத்தின் தவத்தினுடைய. அங்குரம் போல்-முளையைப் போல். வளர்ந்தருளி-வளர்ச்சியை அடைந்தருளி. அருபொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறை யோடு-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களோடு. உலகு-இந்த மண்ணுலகில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். உய்யஉஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். எங்கள்-அடியேங் களுடைய. இது சேக்கிழார் தம்மையும் பிற திருத்தொண்டரி களையும் சேர்த்துக் கூறியது. பிரான்-தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்; ஒருமை பன்மை மயக்கம். ஈராண்டின் மேல்-இரண்டு பிராயங்களுககு மேலே. ஆண்டு: ஒருமை பன்மை மயக்கம். ஒராண்டு-ஒரு. பிராயத்தை. எய்துதலும்-அடைந்தவுடன். r

பிறகு வரும் 54-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

“தம்முடைய நாக்கு ஆட்சி புரிந்த பலவாகிய அறுபத்து நான்கு கலைகளும், பிரமதேவனுடைய நாக்கில் அமர்ந்: திருக்கும் மகளாகிய சரக்வதியும் நன்மைகள் சிறப்பாக அடைந்து விளங்க செந்தாமரை மலரை ஆட்சி புரிந்து அதன் மேல் வீற்றிருந்த திருமகளும், பக்தர்கள் புரிந்த புண்ணியச் செயல்களும் தோற்றப் பொலிவை அடைய இடபத்தை ஆட்சி புரிந்த துவசத்தை ஏந்தியவராகிய பிரமபுரீசர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிரபுரமாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய சிறிய ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு மூன்று.