பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 73

உணர்வு-உணர்ச்சி. ஒரு கால்-ஒரு தடவை. கொண்டு-தம் முடைய திருவுள்ளத்தைப் பற்றிக் கொண்டு. எழலும்எழுந்தவுடன். வெருக் கொண்டாற் போல்-அச்சத்தைக் கொண்டாற் போல். குறிப்பு-தாம் குறித்த எண்ணம். அயலாய்-வேறு ஒர் இடத்தில் உள்ளதாகி. அழுவார்அழுவாராயினார், . .

பின்பு வரும் 56-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மேன்மையையும் தகுதியையும் பெற்ற இந்தத் தினங் களில் வேறு ஒரு தினத்தில் இருக்கு வேதம், யஜுர் வேதம்: சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களும் விதித்த விதிகளின் படி நியாயமான முறையில் அமைந்த மங்கலச் சடங்குகளை நெறிப்படி நிறைவேற்று வதற்காகப் பிரமதீர்த்தத்தில் முழுகும் பொருட்டுத் தம் முடைய தந்தையாராகிய சிவபாத இருதயர் செல்லும் சமயத்தில் தம்முடைய தலைவனாகிய பிரமபுரீசன் வழங்கிய திருவருள் சேர ஒளியை வீசும் அழகிய தம்முடைய திரு மாளிகைக்கு முன்னால் இருக்கும் முற்றத்தில் தம்முடைய தந்தையாரைத் தொடர்ந்து சென்று அழுது கொண்டே அவருக்குப் பின் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந் தருளிப் போனார். பாடல் வருமாறு:

மேதகைய இந்நாளில் வேறொருகாள் வேதவிதி திேமுறைச் சடங்குநெறி முடிப்பதற்கு நீராடத் தாதையார் போம்பொழுது தம்பெருமான் அருள்கூடச் சோதிமணி மனைமுன்றில் தொடர்ந்தழுது பின்

சென்றார்."

மேதகைய-மேன்மையையும் தகுதியையும் பெற்ற. இந்நாளில்-இந்தத் தினங்களில்; ஒருமை பன்மை மயக்கம். வேறு-வேறாக உள்ள. ஒரு நாள்-ஒரு தினத்தில், வேதஇருக்கு வேதம், யஜூா வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களும்; ஒருமை பன்னம மயக் கம், விதி-விதித்த விதிகளின் படி; ஒருமை பன்மை மயக்கம் !