பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 6 பெரிய புராண விளக்கம்-10

துக் கொண்டு அவரோடு. சென்றார்-பிரமதீர்த்தத்திற்கு நீராடும் பொருட்டுப் போனார்.

அடுத்து வரும் 58-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

முப்பத்திரண்டு வகையாகிய அறங்களைப் புரிவதில் தலை சிறந்து நின்றவராகிய அந்தச் சிவபாத இருதயர் இந்தக் கலியுகத்தின் இறுதிக் காலத்தில் ஒப்பற்ற விதத்தில் பெருகி எழுந்த சமுத்திரத்தினுடைய நீர் வெள்ளங்கள் பல வற்றை விரிவாக உண்டாக்கும் கருப்பத்தைப் போல இடை விடாத பெருமையைப் பெற்று விளங்கும் தீர்த்தங்கள் யாவற்றிற்கும் பிறப்பதற்கு உரிய இடமாகி இடபமாகிய துவசத்தை உயர்த்திப் பிடித்தவராகிய தோணியப்பர் வீற் அறிருக்கும் அழகிய தோணியாகிய பற்றுக் கோட்டை விடாத மேம்பாட்டைப் பெற்று விளங்குவதாகும் தடாகமாகிய அந்தப் பிரமதீர்த்தத்தினுடைய துறையை அவர் அடைந் தார். பாடல் வருமாறு:

'கடையுகத்தில் தனிவெள்ளம் பலவிரிக்கும் கருப்பம்

போல் இடையறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும்

பிறப்பிடமாய் விடையுயர்த்தார் திருத்தோணிப் பற்றுவிடா

மேன்மையதாம் தடமதனில் துறையடைந்தார் தருமத்தின்

தலைகின்றார்.'

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் துள்ளது. தருமத்தின் முப்பத்திரண்டு வகையாகிய அறங் களைப் புரிவதில்; ஒருமை பன்மை மயக்கம். அந்த அறங்கள் இன்ன என்பதை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. தலைநின்றார்-தலை சிறந்து நின்றவராகிய சிவபாத இருதயர். கடையுகத்தில்-இப்போது நடை பெற்று வரும் இந்தக் கலியுகத்தின் இறுதிக் காலத்தில். தனி-ஒப்பற்ற விதத்தில் பெருகி எழுந்த, வெள்ளம்-சமுத்திரத்தினுடைய