பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த முர்த்தி நாயனார் புராணம் 3

'அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருமேனியின் மேல் தம் முடைய விழிகளிலிருந்து வழியும் நீர்த்துளிகள் குளிர்ச்சியைப் பெற்று வழிய வேறு எந்த இடத்தையும் பார்த்து அழுபவ ராகி தம்முடைய முன் பிறப்பில் இருந்த சார்பைத் தெரிந்து கொண்டோ, அல்லது தம்மைச் சார்ந்திருக்கும் குழந்தைத் தன்மையோ சிவந்த திருமேனி முழுவதும் வெண்மையான விபூதியைப் பூசிக் கொண்டருளுபவராகிய தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் அழகிய தோணியின் மேல் உள்ள கோபுரத்தை நோக்கி, அம்மையே, அப்பனே.” என்று என்று பல முறைகள் அந்தத் தோணியப்பரை அழைத்தருளி அழுதருள, பாடல் வருமாறு:

மெய்ம்மேற்கண் துளிபனிப்பு வேறெங்கும்

பார்த்தழுவார் தம்மேலைச் சார்புணர்ந்தோ, சாரும்பிள்ளை

மைதானோ? செம்மேனி வெண்ணிற்றார் திருத்தோணிச்

சிகரம்பார்த்

'தம்மே, அப்பா!' என்றென் றழைத்தருளி அழுதருள."

இந்தப் பாடல் குளகம். மெய்-அந்த ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருமேனியின். ம்:சந்தி,மேல் மீது. கண்-தம்முடைய விழிகளி விருந்துவழியும் ஒருமை பன்மை மயக்கம். துளி-நீர்த்துளிகள்: ஒருமை பன்மை மயக்கம். பனிப்ப-குளிர்ச்சியைப் பெற்று வழிய, வேறு எங்கும்-வேறு ஏதோ இடத்தை. உம்மை: வேண்டா வழி வந்தது. பார்த்து-நோக்கி, அழுவார்அழுபவராகிய அந்த நாயனார். தம்-தம்முடைய மேலைமுன்பிறவியில் இருந்த, ச் சந்தி. சார்பு-தொடர்பை, உணர்ந்தோ-தெரிந்து கொண்டோ. இது குறி ப் பா திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் முன் பிறப்பில் முருகக் கடவுளாக இருந்ததைப் புலப்படுத்துகிறது. அருணகிரியார் முதலிய சான்றோர்கள் திருஞான சம்பந்த மூர்த்தி நாய