பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் &烈

கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்

பொற்ப கவுணியர் பெருமான் உருவாய்

-வருவோனே."

" சமணனாக் கழுவேற்றிய-பெருமானே.”

பிறகு வரும் 64-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அழுதருளிய அந்த நிலையில் சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டு மலை யின் மேல் விளங்கும் அழகிய தோணியில் அமர்ந்திருந்த வராகிய தோனியப்பர் வழங்கிய திருவருட் பார்வையினால் முன்னால் அவரிடம் இருந்த நிலைமையின் படி திருத் தொண்டுகளை எண்ணி அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குத் தம்முடைய திருவருளை வழங்கும் பொருட்டு தங்கம் தோன்றும் இமய மலையரசனுடைய புதல்வியும், பூங்கொடியும் போன்றவளாகிய பார்வதி தேவியும் சிவ பெருமானாரும் போர் புரியும் இடப வாகனத்தின் மேல் எழுந்தருளி வந்து தம்முடைய தலையின் மேல் இளைய பிறைச் சந்திரன் விளங்கச் செழுமையைப் பெற்ற பொய் கையாகிய பிரமதீர்த்தத்தின் பக்கத்தை அடைந்தார்." பாடல் வருமாறு:

அங்கிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்

- நோக்கால்

முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்

கருள்புரிவான்

பொன்மலைவல் லியும்தாமும் பொருவிடைமேல்

எழுந்தருளிச்

சென்னிஇளம் பிறைதிகழச் செழும்பொய்கை

மருங்கனைந்தார்." அந்நிலையில்-அந்த ஆண் குழந்தையாராகிய திருஞான

சம்பந்த மூர்த்தி நாயனார் அழுதருளிய அந்த நிலையில். திரு-அழகிய, த், சந்தி.தோணி-சீகாழியில் உள்ள பிரமபுரீசரு