பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெரிய புராண விளக்கம்-1).

உடன் இருந்த தம்மோடு வீற்றிருந்த அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக் கம். ஆள் உடையவளை. ஆட்சி புரிதலைப் பெற்றவளா கிய பெரிய நாயகியை. ஆன்: முதல் நிலைத் தொழிற். பெயர். அளித்தருள-தன்னுடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்த பாலை வழங்கியருளுமாறு. அருள் செய்வார். தோணியப்பர் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார்.

பிறகு வரும் 66-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அழுதருளுகின்ற ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பார்த்து திருவருளும் கருணையும் எழுந்து தோன்றுகின்ற திருவுள்ளத்தைப் பெற்ற: இறையவராகிய தோனியப்பர் எந்த வகையான உலகங். களில் வாழ்பவர்களும் வணங்குகின்ற இமய மலையரசனு: டைய புதல்வியும், பூங்கொடியைப் போன்றவளுமாகிய பெரிய நாயகியை நோக்கியருளி, உன்னுடைய இரண்டு கொங்கைகளும் சொரிகின்ற பாலாகிய உணவை ஒரு பொற் கிண்ணத்தில் வைத்து இவனுக்கு உண்ணுமாறு வழங்கு வாயாக' என்று அந்தத் தோனியப்பர் திருவாய் மலர்ந்: தருளிச் செய்ய. பாடல் வருமாறு:

அழுகின்ற பிள்ளையார்

தமைநோக்கி அருட்கருணை எழுகின்ற திருவுள்ளத்

திறையவர்தாம் எவ்வுலகும் தொழுகின்ற மலைக்கொடியைப்

பார்த்தருளித் துணைமுலைகள் பொழிகின்ற பால் அடிசில்

பொன்வள்ளத் தூட் டென்ன." இந்தப் பாடல் குளகம். அழுகின்ற-தம்முடைய கண் களைத் தம்முடைய கைகளால் பிசைந்து கொண்டு அழு.