பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் gi

நாயனாருடைய திருக்கண்களில் வழியும் நீரைத் தன்னுடைய திருக்கரத்தால் துடைத்தருளி அந்த நாயனாருடைய வலக் கையில் ஒரு பொற்கிண்ணத்தை வழங்கியருளி தலைவ

ராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த் தி நாயனார் என்னும்

ஆண் குழந்தையை அந்த இடத்தில் அழுதருளிய அழுகையை

மாற்றிவிட்டு அழகிய கண்களைப் பேற்ற அராகிய தோணி

யப்பர் அந்த நாயனாருக்குத் தம்முடைய திருவருளை வழங்

கினார். பாடல் வருமாறு:

' எண்ணரிய சிவஞானத் தின்னழுதுங் குழைத்தருளி

'உண்ணடிசில்' என ஊட்ட உமையம்மை எதிர்நோக்கும் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற்

கிண்ணம் அளித் தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கணனார்

அருள்புரிந்தார்.' எண்ணரிய-நினைப்பதற்கு அருமையாக உள்ள. என்: முதல் நிலைத்தொழிற் பெயர். சிவஞானத்து-சிவஞான மாகிய, இன்-இனிய சுவையைப் :ெற்ற, அமுதம்-அமுதத் தைப் போன்ற பாலைத் தம்முடைய கொங்கைகளிலிருந்து ஒரு பொற்கிண்ணத்தில் கறந்து அந்தப் பாலோடு சிவ ஞானத்தை, அமுதம்: உவம ஆகு பெயர். குழைத்தருளிஅந்தப் பெரிய நாயகியார் குழைத்தருளி. அடிசில்-இந்தப் பாலாகிய உணவை. உண்-நீ உண்பாயாக, எண-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. ஊட்ட அந்த நாய னாரை உண்ணுமாறு செய்தருள, உமையம்மை-உமையம் மையாகிய பெரிய நாயகி. எதிர் நோக்கும்-தம்மை எதிரில் பார்க்கும். கண்-விழிகளாகிய ஒருமை பன்மை மயக்கம், மலர்-செந்தாமரை மலர்களிலிருந்து வழியும்; ஒருமை பன்மை மயக்கம். நீர்-நீரை. துடைத்தருளி-தம்முடைய வலக்கையால் துடைத்தருளி. க்: சந்தி, கையில்-அந்த நாய னாருடைய வலக்கையில். பொற் கிண்ணம்-ஒரு தங்கக் கிண்ணத்தை அளித்து-வழங்கியருளி. அண்ணலை-தலை வராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை,